பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
174

களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே, திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப்பட்டவர்களாகையாலே என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில், அதுதனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன, ‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்துபோந்த இப் பெண்பையல்களை இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன, “துர்பலா - ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப்புக்கால், அப்போதே அவர்கள் கண்குழிவு காணமாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” 1இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினையுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ. ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று 2“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக்கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ‘ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ.

    அன்னையரும் தோழியரும் - என் நிலையைக் கண்டு என்னைப் போன்றே 3உறக்கத்தைத் துறந்தவர்களோடு, ‘உறக்கம் துறக்கக் கூடாது’ என்று விலக்குகின்றவர்களோடு வாசி அற ஒக்க எடுக்கும்படியாய் வந்து விழுந்தது. என்றது, என் நினைவே நினைவாய் இருக்குமவர்களோடு தங்களுக்கு என்ன ஒரு நினைவுண்டாய் நியமிக்கத் தக்கவர்களோடு வாசி அற்றது என்றபடி. அன்னையரும் தோழி

______________________________________________________

1. “துர்பலா” என்றால், மனோபலம் இல்லாமை என்று ஆக வேண்டுமோ?
   சரீரவலி இன்மையைச் சொன்னதாகக் கொண்டால் என்னை? எனின்,
   அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராவணனும்’ என்று தொடங்கி. ‘இது’
   என்றது, மனவலி இன்மையை.

2. “தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
   அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.

3. உறக்கத்தைத் துறந்தவர்கள் - தோழிமார்கள். விலக்குகின்றவர்கள் -
  தாய்மார்கள்.