பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
18

மற

மற்றுள வாப் புறமே சில மாயம் சொல்லி’ என்றும், பகவத் விஷயத்திலேயும் பொய் சொல்லிப் போந்தேன் என்றார்; இப்படிப் பொய்யன் ஆகைக்குக் காரணம் யாது? என்று பார்த்தார்; சரீரத்தின் சேர்க்கையாய் இருந்தது; ‘மெய்யே பெற்றொழிந்தேன்’, ‘கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்’ என்றவற்றை மறந்தார்; இந்தப் பிரகிருதி சம்பந்தத்தால் இதர விஷயங்களிலே ஈடுபட்டுள்ள மனத்தினை அவற்றில் நின்றும் மீட்டு உன் பக்கலிலே ஈடுபடும்படி செய்து, தேகத்திற்காட்டில் ஆத்மாவைப் பிரிய அநுசந்திக்கைக்கு ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன், நீயே என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக்கொண்டருளவேண்டும் என்கிறார்” என்று பட்டர் அருளிச்செய்வர்.

    1
அன்றிக்கே, “கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்” என்றார்; அது அகக்கண்ணிற்கு மட்டும் தோன்றக் கூடியதான காட்சியாக இருந்தது; காட்சிக்குப் பின்பு புறக்கலவியிலே அபேக்ஷை பிறந்து கையை நீட்டினார், கைக்குள் அகப்படக் கண்டிலர், அதனாலே தளர்ந்து; இதற்குக் காரணம் தேக சம்பந்தமாய் இருந்தது, இதனைக் கழித்துக்

_______________________________________________

  திலும் துக்கமாயிருக்கைக்கு அடி என்? என்ன, அதற்குப் பூர்வாசாரியர்கள்
  அருளிச்செய்த இருவகை நிர்வாஹங்களையும் அருளிச்செய்கிறார்
  “பொய்யே கைம்மை சொல்லி” என்று தொடங்கி. ‘சரீரத்தின்
  சேர்க்கையாயிருந்தது’ என்றது, “மலினம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
  ‘எப்படியாகிலும் பல சித்தி உண்டாயிற்று’ என்றாரே?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் “மெய்யே பெற்றொழிந்தேன்” என்று தொடங்கி.
  ‘அவற்றில் நின்றும் மீட்டு’ என்றது, “வலித்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
  “நின்கண் நெருங்கவைத்தே” என்றதனை நோக்கி ‘உன் பக்கலிலே
  ஈடுபடும்படி செய்து’ என்கிறார். “அறுத்துக் கூவியருளாய்” என்றதனை
  நோக்கி ‘நீயே என் விரோதியைப் போக்கி’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். பட்டர் நிர்வாகத்திலே ‘அஜ்ஞானத்தாலே பிரபந்நர்
  ஆழ்வார்’ என்ற அர்த்தம் போதரும்.

1. ‘அன்றிக்கே’ என்றது முதல், ‘உண்டாக நினைத்திராரே அன்றோ’ என்றது
  முடிய, பூர்வர்கள் நிர்வாகம். இவர்கள் நிர்வாகத்திலே ‘பக்தி
  பாரவஸ்யத்தாலே பிரபந்நர்’ என்ற அர்த்தம் போதரும். ‘தம்முடைய
  இந்தப் பக்தி சாதனமாகாதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘முறைப்படி வரும்’ என்று தொடங்கி. ‘முறைப்படி வரும் பக்தி’ என்றது,
  கர்ம ஞானங்களை அநுஷ்டித்து அந்த அடைவிலே வரும் பக்தி.