பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
190

திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந - இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந - 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்

___________________________________________________

1. அப்படி அவன் பரிகரங்களில் நினைவறிந்து செய்த பேர் உண்டோ
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பாவஜ்ஞேந’ என்று தொடங்கி.

  “பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந ச லக்ஷ்மண
   த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்த: பிதா மம”

  இது, ஸ்ரீராமா, ஆரண். 15 : 29. பர்ணசாலையை அமைத்த
  இளையபெருமாளைப் பார்த்துப் பெருமாள் கூறியது.

2. அவர் அருளிச்செய்யாதிருக்க நினைவறிந்து காரியம் செய்யும்படி எப்படி?
  என்ன, ‘அவர்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  “தூதுசெய் கண்கள்கொண்டு” என்பது, திருவாய்மொழி, 9. 9 : 9. ‘இவரும்
  செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை’ என்றது, ‘கட்செவி’ என்ற
  பெயரின் பொருளைத் திருவுளத்தே கொண்டு, இளையபெருமாள்
  ஆதிசேஷன் அவதாரமாதலை நினைவுகூர்தல் தகும்.

3. “க்ருதஜ்ஞேந” என்றதனை, க்ருதம்ஜாநாநீதி - க்ருதஜ்ஞ: என்று
  கொண்டு, அதற்குப் பாவம் அருளிச்செய்கிறார் ‘வருந்தி’ என்று தொடங்கி.
  ‘அறுபதினாயிரம்’ என்று தொடங்கும் இவ்விடத்தில்,

  அறுபதி னாயிரம் ஆண்டும் ஆண்டுற
  உறுபகை ஒடுக்கிஇவ் வுலகை ஓம்பினேன்
  பிறிதொரு குறைஇலை எற்பின் வையகம்
  மறுகுறும் என்பதோர் மறுக்க முண்டரோ.

 
என்ற செய்யுள் நினைவுகூர்க.