பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
192

ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர். லோகநாத-வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ. 1அன்றிக்கே, கைவந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தையுடையவன் என்னலுமாம். 2“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

    என் கண்ணன்-3அடியார்கட்காகத் தன் சூளுறவையும் அழிய மாறுமவன் அலனோ. அடியார்களுள் ஒருவர்க்குச் செய்தது எல்லார்க்குமாக இருக்குமே. 4‘அடியார்கட்காகத் தன் சூளுறவை அழியமாறும்’ என்னுமிது தஞ்சமாக அன்றோ இவனைப் பற்றுகிறார் பற்றுவது. தனக்கு என்னவும் நியதமாயிருப்பன சில உளவாகில் இவனைப் பற்றுவார்க்குப் பலம் இல்லை. தை வந்த தண் தென்றல் - குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் என்னுதல். தடவிக் கொண்டு வருகின்ற குளிர்ந்த தென்றல் என்னுதல்; என்றது, கணவன் கைகளால் தன்னைத் தீண்டுவதனை நினைப்

____________________________________________________

1. “கைவந்த சக்கரத்து” என்பதற்குக் கூறத் திருவுள்ளம்பற்றிய இருவகைப்
   பொருள்களுள் முதற்பொருளை இதுகாறும் அருளிச்செய்து, இரண்டாவது
   பொருளை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. விதேயம்
   - அடக்கம். விதேயன்-சொன்னபடி செய்கிறவன்.

2. “அமர்ஷீ துர்ஜயோ ஜேதா விக்ராந்தோ புத்திமாந் பலீ
   ராமஸ்ய தக்ஷிணோ பாஹு: நித்யம் ப்ராணோ பஹிஸ் சர:”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 28 : 25. இராவணனைப் பார்த்துச் சுகன் கூறியது.

3. “என்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அடியார்கட்காக’ என்று
   தொடங்கி. அடியார்களுக்காகச் செய்தால் தமக்கு என்? என்ன, அதற்கு
   விடை அருளிச்செய்கிறார் ‘அடியார்களுள்’ என்று தொடங்கி.

4. சூளுறவைக் காப்பாற்றுதல் அன்றோ தஞ்சம், அதனை அழிப்பது
  தஞ்சமாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அடியார்கட்காக’
  என்று தொடங்கி. ‘அடியார்கட்காக’ என்றது, அருச்சுனனைக்
  காப்பாற்றுதற்காக என்னுதல்; வீடுமனுடைய  சூளுறவை முடித்துவைத்தற்காக
  என்னுதல். கிருஷ்ணனுடைய பொய்யும், ஸ்ரீராமபிரானுடைய மெய்யும்
  அடியார்கட்குத் தஞ்சம் என்பது.