|
என
என்னுதல். 1சர்வேச்வரனோடு
சாம்யம் பெற்றதாகிலும் தெரிகிறது இல்லை. அவன் எங்கும் பரந்திருக்கச் செய்தே ஆகாசத்தினது
பரப்புப் போலன்றிக்கே பொருள்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, இதுவும் அழகுகள்தோறும்
நிறைந்து இராநின்றது. செல்கின்றது-2இன்னமும் தறை கண்டது இல்லை. 3நாங்களும்
எல்லாம் நம்பியுடைய அழகினை அநுபவித்திருக்கிறோம் அன்றோ, எங்கள் சொற்களை மறுக்கலாகாதுகாண்;
என்ன, உங்கள் சொற்களை மறுத்தேனேயாகிலும் நம்பியுடைய திருமுகம் மறுக்க ஒண்ணாது என்கிறாள்.
எங்களுக்கு இப்படி இராமல் ஒழிவான் என்? என்ன, என் நெஞ்சமே - உங்களைப் போலன்றிக்கே,
அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.
4எங்ஙனேயோ
என்னை முனிவது நீர் - 5காதலுக்குக் காரணமாக இருக்கிற நம்பியினுடைய அழகினைப்
பொடியாதே, என்னைப் பொடியக் கூடினபடி எங்ஙனேயோ? 6பிராவண்யமே ஸ்வபாவமாம்படி
வளர்த்து வைத்து, இப்போதாகப் பொடிகிறபடி எங்ஙனேயோ? முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து,
அது பயன்பட்டவாறே பொடியுமத்தனையோ? கோலம்-உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாத
____________________________________________________
1. அணுவான நெஞ்சுக்கு அழகுகள்தோறும்
பரந்து செல்லுதல் கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சர்வேச்வரனோடு’ என்று
தொடங்கி.
சாம்யத்தை விவரிக்கிறார் ‘அவன்’ என்று தொடங்கி.
2. “செல்கின்றது” என்ற நிகழ்காலத்துக்குப்
பொருள் அருளிச்செய்கிறார்
‘இன்னமும்’ என்று தொடங்கி.
3. “தாமரைக் கண்கள், செங்கனிவாய்”
என்பனவற்றிற்குத் தனித்தனியே கருத்து
அருளிச்செய்தார் இதுகாறும். இனி, எல்லாவற்றையும் சேர்த்து
ரசோக்தியாகக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘நாங்களும்’ என்று தொடங்கி.
4. சிறிதுபோழ்து தாழ்த்துவந்த
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கு, திருப்பாசுரத்தின்
பொருளைச் சுருக்கமாக மீண்டும் அருளிச்செய்கிறார்
‘எங்ஙனேயோ’ என்று
தொடங்கி.
5. “என்னை முனிவது எங்ஙனேயோ”
என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘காதலுக்கு’ என்று தொடங்கி.
6. “அன்னைமீர்காள்!
நீர் என்னை முனிவது எங்ஙனேயோ! என்று கூட்டி,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பிராவண்யமே’ என்று
தொடங்கி. மேல்
வாக்கியத்தை விவரிக்கிறார் ‘முன்பு நீங்கள்’ என்று தொடங்கி.
|