|
New Page 2
நோக்கிக் காணீர் -
1நீங்கள் என்னைப் பொடியாதே உங்களையே பொடிந்து கொள்ளும்படி, என் நெஞ்சை
இரவலாக வாங்கிப் பார்க்கவல்லீர்கோளே. என்றது, ‘இவளையன்றோ நாம் இத்தனை சொல்லிற்று’
என்று பின்னை உங்களை நீங்களே பொடிந்து கொள்வீர்கோள் என்றபடி. என்னை முனியாதே - 2“கணபுரம்
கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக்கூடியதாக இருக்க, நம் வயிற்றிற்பிறந்த
இதுவே காரணமாக, இவள் நின்றநிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று பின்னையும்
உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள். ‘என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’ என்கையாலே
உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள் என்றபடி. ஆயின், பக்தியினால் அன்றிச் சாஸ்திரங்களின்
அறிவைக்கொண்டு அவனை அறியப்போகாதோ? என்ன, “பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்-பக்தியுடன்
சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே, 3சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன்,
நீயும் நானும் ஒருசேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம். இங்ஙனமிருக்கவும், நான் உன்பக்கலிலே
கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன, எனக்குள்ள
வாசி கேளாய், மாயாம் ந சேவே - நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும்
_____________________________________________________
1. உன் நெஞ்சினால் காணின்
வரும் வாசி யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நீங்கள்’ என்று தொடங்கி.
2. “என்னை முனியாதே” என்றதற்கு,
என்னைக் கொண்டாடும்படி என்றாய்,
அதனால் பலித்தது, உங்களை முனிந்து கொள்ளும்படியாக்கி,
அதனைப்
பிரமாண மூலமாக அருளிச்செய்கிறார் ‘கணபுரம்’ என்று தொடங்கி.
முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள்
என்செய்கேன்?
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையைப் பிள்ளைஎன் றெண்ணப்
பெறுவரே.
என்பது, பெரிய திருமொழி, 8. 2:
9.
3. “பக்தியா”
என்ற சுலோகத்துக்குப் பொருள் அருளிச்செய்யத்
திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்
‘சஞ்சயனை
நோக்கி’ என்று தொடங்கி. இந்தச் சுலோகம், பாரதம் உத்யோக பர். 68:5.
|