பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
236

1

1“உலகநாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக்கை. இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக்கடவதன்றோ. 2கணவனுடைய கரத்தின் பரிசமேயாயிற்றுப் பொறுப்பது. 3இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. 4அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. 5இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் 6இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ. நையும்-தன் கையும் கூடப் பொறாமையாலே

____________________________________________________ 

1. தன் கையையுங்கூடப் பொறாமைக்கும் பிரமாணம் காட்டுகிறார்
  ‘உலகநாதனான’ என்று தொடங்கி.

  “உபதாயபுஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம்
   கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 21:19. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

2. பொறுப்பது யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘கணவனுடைய’ என்று தொடங்கி.

3. தன் கையுங்கூடப் பொறாமைக்கு, சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார்
  ‘இதனால்’ என்று தொடங்கி. ‘இதனால்’ என்றது, “நன்முகம்” என்றதனால்
  என்றபடி.

4. இந்த விதமான பாரதந்திரியத்திற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார்
  ‘அதுவே அன்றோ’ என்று தொடங்கி.

5. இது, நமஸ் ஸப்தார்த்தம் என்கைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இதனுடைய’ என்று தொடங்கி. என்றது,
  என்சொல்லியவாறோ? எனின், இதனுடைய சுருக்கமான உகாரத்திலேயும்,
  அந்யசேஷத்வநிவ்ருத்தி சொல்லப்பட்டிருக்க, மீளவும் “நம:” என்னும்போது
  ஸ்வசேஷத்வ நிவ்ருத்தி ரூபமாய், தன்னொடு தனக்கு அந்வயம் இல்லாத
  பாரதந்திரியமே “நம:” என்ற சொல்லால் சொல்லப்பட்ட பொருளாக
  வேணும் என்றபடி. ‘உகாரத்திலே’ என்றது, பிரணவத்திலே உள்ள
  உகாரத்திலே என்றபடி. பிரிநிலையை, உகாரத்திற்குப் பொருளாக
  அருளிச்செய்வர்.

6. ‘இது’ என்றது, தன்னோடு தனக்கு அந்வயம் இல்லாமையாகிய தன்மையைக்
  குறித்தபடி. ‘இதுவே’ என்றது, தன்னொடு தனக்கு அந்வயம் இல்லாத
  பாரதந்திரியமே என்றபடி.