பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
241

கழ

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் - 1எல்லாருடைய காதலைக்காட்டிலும் வேறுபட்ட காதல்; அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். நாட்டார், 2“நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; 3எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாராநின்றது” என்னக் கடவதன்றோ. அன்னை காணக் கொடாள்-‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள். ஆனால், இப்போது 4இங்ஙனம் படுகிறது என்? என்னில், தர்மிலோபம்  வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே, சரீரம் உண்டாய் மேல் நடக்கவேணும் என்று இருப்பவள் அன்றோ. காண்கையாவது - அநுசந்தித்தல். 5“நெஞ்சு என்னும் உட்கண்” என்னக்கடவதன்றோ. நெஞ்சையுங்கூட வாய்கட்டா நின்றாள்.

_____________________________________________________

1. ‘எல்லாருடைய காதலைக்காட்டிலும் வேறுபட்ட காதல்’ என்றது,
   உலகத்தைக் கடந்த மிகுதியான காதல் என்றபடி.

2. நாள் கழியக் கழியப் பெருகி வருவதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘நாள் செல்லச் செல்ல’ என்று தொடங்கி.

  “ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
   மமச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.

3. மேலே காட்டிய சுலோகத்திலுள்ள “மமச” என்ற சகாரத்தை ‘து’
  சப்தார்த்தமாக்கிப் பொருள் அருளிச்செய்கிறார் ‘எனக்கு அங்ஙன்
  அன்றிக்கே’ என்று தொடங்கி.

4. ‘இங்ஙனம் படுகிறது என்? என்னில்,’ என்றது, காதல் மிக்கால் ஒட்டாமல்
   படுகிறது என்? என்னில், என்றபடி.

5. “காண” என்பதற்கு, அநுசந்தித்தல் என்பது பொருளானால், நினைக்க
   ஒட்டாள் என்னாமல், “காணக் கொடாள்” என்பான் என்? என்ன, அதற்கு
   விடை அருளிச்செய்கிறார் ‘நெஞ்சென்னும்’ என்று தொடங்கி.

  அன்றேநம் கண்காணும் ஆழியான் காருருவம்
  இன்றேநாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
  கட்கண்ணால் காணாத அவ்வுருனவ நெஞ்சென்னும்
  உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

 
என்றது, பெரிய திருவந். 28.