|
New Page 1
பொ-ரை :-
புறத்திலே ஒன்றும் தோன்றாதவாறு நலமுறக் கட்டிக் கொண்டு வருத்துகின்ற கொடிய இரண்டு வினைகளாலே
சரீரத்தில் முறை முறையாகப் புகுதல் தவிரும்படியாக, நிறத்தையுடைய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
சிவந்த திருவாயினையும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையும் அறத்தையே செய்கின்ற சக்கரத்தைத்
தரித்த அழகிய திருக்கையையும் கரிய மேனியையுமுடைய சுவாமியைக் கண்டுகொண்டேன் என்கிறார்.
வி-கு :-
கட்டிக்கொண்டு குமைக்கும் வினையார் என்க. ‘வினையார்’ என்பதில் ஆர் விகுதி, இழித்தற்கண்
வந்தது. யாக்கையிலே முறை முறை புகல் ஒழிய அம்மான் தன்னைக் கண்டுகொண்டொழிந்தேன் என்க.
‘கண்டுகொண்டொழிந்தேன்’ என்பது, ஒரு சொல்.
ஈடு :-
ஆறாம் பாட்டு. 1“போரவைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை
மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’ என்று பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட, அவ்வடிவழகைக்
கண்டவாறே தம்முடம்பை மறந்து பிரீதராய், கண்டுகொண்டேன் என்கிறார். இவரை மெய்ம் மறக்கப்
பண்ணிற்று அவன் வடிவு.
புறம் அறக் கட்டிக்கொண்டு-பிணைத்த
இடம் அறிந்து இவனால் அவிழ்த்துக்கொள்ள ஒண்ணாதபடியாக, புச்சம் தோன்றாதபடி உள்முடியாக முடிந்து.
2“என்னுடைய மாயையானது தாண்ட முடியாதது” என்கிறபடியே, சர்வ சக்தியான தான் பிணைத்த
பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்ணாது என்றானே அன்றோ. இரு வல் வினையார் குமைக்கும்-இரு வகைப்பட்ட
மஹாபாவங்கள் தகர்க்கும். குமைக்கும்
___________________________________________________
1. “நிறமுடை நால்
தடந்தோள்” என்பது போன்றவைகளால் இறைவன்
தன்னுடைய வடிவழகைக் காட்டுகையாலே ‘இவருடைய இழவை
மறப்பித்தல்’ பொருள் ஆற்றலால் போதரும். ‘வடிவழகை’ என்றது,
“நிறமுடை நால் தடம் தோள்”
என்பது போன்றவைகளால் பெறுதும்.
“கண்டுகொண்டு” என்றதனால், அவன் ‘காட்ட’ என்பது போதரும்.
‘உடம்பை மறந்து’ என்றது தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தை
அநுசந்தித்தபடியால் வந்த துக்கத்தை
மறந்து என்றபடி. ‘மெய்’ என்றது
சிலேடை: சரீரமும், சத்தியமும் என்பன பொருள். மெய்ம் மறக்கப்
பண்ணிற்று -சரீரம் காரணமாக வந்த துக்கத்தை மறக்கப் பண்ணிற்று.
2. அவிழ்த்துக்கொள்ள
முடியாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய’ என்று தொடங்கி, “மம மாயா துரத்யயா” இது ஸ்ரீ
கீதை,
14. 7 :
|