பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
251

கடல

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் - 1“நான் உலகம் அனைத்துக்கும் காரணபூதன்” என்னாநின்றாள். 2கடலோடுகூடின உலகத்திலே எல்லாப்பொருள்களும், கண்களுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி அழிந்து, “சதேவ - சத்து ஒன்றே இருந்தது” என்கிறபடியே, தனக்கு என்ன ஒருபெயரும் உருவமும் இல்லாதபடி அழிந்த அன்று, இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். 3சூக்ஷ்மமான சித்து அசித்துக்களோடுகூடின பிரஹ்மமே காரணமாய், அதுதானே ஸ்தூல அவஸ்தையை அடைதலே அன்றோ காரியமாகிறது. 4சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கையாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே, தானே முதற்காரணமும் நிமித்தகாரணமும் துணைக்காரணமுமாய் அன்றோ இருப்பது. இப்படி மூன்றுவித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். ‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

   
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் - 5“அவற்றைப் படைத்து அவற்றுள் பிரவேசித்து நின்றான், அவற்

____________________________________________________

1. “அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: பிரபவ: பிரளய ஸ்ததா”

  என்பது, ஸ்ரீ கீதை. 7 : 6.

2. அழிந்தபின்னரே படைத்தல் செய்ய வேண்டுமாதலின், படைப்புக்கு முன்னே
  நிகழ்கின்ற அழித்தலையும் சேர்த்துக்கொண்டு அருளிச்செய்கிறார். ‘கடலோடு
  கூடின’ என்று தொடங்கி. ‘ஒரு துரும்பு’ என்றது, இளநீர்க் குழம்பு இடுகிற
  துரும்பைச் சொல்லுதல்; அஞ்சனம் எழுதுகிற கோலைச் சொல்லுதல்.

3. மூன்று விதமான காரணங்களும் தானேயாகக் கூடுமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘சூக்ஷ்மமான’ என்று தொடங்கி. மூன்று விதமான
  காரணங்களும் தானேயானாலும், பரிணாமம் விசேஷணாம்சத்திலே
  என்னுமிடந் தோற்ற, ‘சூஷ்மமான சித்து அசித்துக்களோடு கூடின
  பிரஹ்மமே காரணமாய்’ என்கிறார்.

4. மேலே கூறியதனை விவரணம் செய்கிறார் ‘சித்து அசித்துக்களோடு’ என்று
  தொடங்கி. இங்கே, முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம் பக். 183, காணல் தகும்.

5. “தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிஸத் தத் அநுப்ரவிஸ்ய
   ஸச்சத்யச்ச அபவத்”

 
என்பது, தைத்திரீய ஆன. 6.