|
க
களேயன்றோ’ என்னுமதனாலே,
‘இராச்சியத்தை வாங்கித்தரவேணும்’ என்று விரும்பிக் கேட்ட அளவே அன்றோ இந்திரன்பக்கல் உள்ளது;
அவனுடைய ஒளதார்யத்துக்குத் தகுதியாகத் தன்னை இரப்பாளனாக்கி, அவன் தரும் விரகு அறிந்து
வாங்கினான் தானேயாதலின் ‘யானே’ என்கிறது.
கடல்ஞாலம் கீண்டேனும்
யானே என்னும் - அசுரத்தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக்
காவலாக வைத்த கடல்தானே இதனை அழிக்க, அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும்
யானே என்னாநின்றாள். 1அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்கவேணும்’ என்று
விரும்பியது இல்லையே அன்றோ; தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது. கடல் ஞாலம்
2உண்டேனும் யானே என்னும் - சிலர் இருத்தல் சிலர் அழிதல் அன்றிக்கே, படைக்கின்றவர்களோடு
அழிக்கின்றவர்களோடு வேற்றுமை அற எல்லாரையும் ஒக்கப் பிரளயம் கொள்ளப் புக, இவ்வுலகம் முழுதினையும்
வயிற்றிலே வைத்துக் காப்பாற்றினேன் நான் என்னாநின்றாள். 3‘அப்போது வேறு சிலர்
காத்தார்கள்’ என்பதற்கு, மற்று ஒருவர் உண்டாகைக்குச் சம்பாவனையும் இல்லையாதலின்
‘யானே’ என்கிறது.
கடல் ஞாலத்து ஈசன்
வந்து ஏறக் கொலோ - எல்லாப் பொருள்களையும் படைத்தவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய்
எல்லாருக்கும் வந்த ஆபத்துகளுக்குத் துணைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அறிகின்றிலேன்.
‘கொலோ’ என்பது, ஐயத்தின்கண் வந்தது அன்று, காணுங்கோள் என்று அறுதியிட்டுச் சொல்லுகிற
வார்த்தை. ‘உன்னைக் கேட்டு அறுதியிட வந்தோம், நீயும் எங்களைப் போன்று ஆராயாநின்றாயே!
____________________________________________________
1. “யானே” என்ற ஏகாரத்தின்
பொருளைத் தெரிவிக்கிறார் ‘அமிழ்ந்து
கிடக்கிற’ என்று தொடங்கி.
2. “உண்டேனும்” என்றதனால்,
ரக்ஷணத்தைச் சொல்லுகிறது, ரக்ஷணம்
தாரகமாகையாலே.
3. “யானே” என்ற ஏகாரத்தின் பொருளைத் தெரிவிக்கிறார் ‘அப்போது’
என்று தொடங்கி.
|