|
கற
கற்கும் கல்விக்கு
எல்லை இலனே என்னும் - அல்ப காலத்துக்குள்ளே சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு ஓர் எல்லை
இல்லை என்னா நின்றாள். அன்றிக்கே, 1“ஆனந்த குணத்தைக் கூறமுடியாமல் அவனிடமிருந்து
வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னாநின்றாள்
என்னுதல். என்றது, கற்கும் கல்வியினுடைய எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன் நான் என்கிறாள்
என்றபடி. அன்றிக்கே, 2“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” என்கிறபடியே,
வேதாந்தங்களாலே அறியப்படுமவன் நான் என்கிறாள் என்னுதல். கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
- 3அவற்றால் அறியப்படாமல் இருக்கிற அளவேயோ, 4“நீரே கல்வி”
என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னாநின்றாள். கற்கும் கல்வி செய்வேனும்
யானே என்னும்-அந்தக் கல்விகளை 5அவ்வக்
____________________________________________________
1. “யதோ வாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மனஸா ஸஹ”
என்பது, தைத்திரீய, ஆனந். 9 :
1.
2. “கற்கும் கல்விக்கு எல்லை
இலனே என்னும்” என்பதற்கு, மூன்று
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். மூன்றாவது பொருளில்
எல்லை
என்பது, வேதாந்தமாய், இல் என்று இருப்பிடமாய், வேதாந்தத்தை
இருப்பிடமாக உடையவன்
என்பது, சொற்பொருள். வேதாந்த வேத்யன்
என்றபடி.
மாலிருஞ் சோலையென்னும்
மலையையுடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக்
கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த
விழுப்பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்
விரித்தனவே.
என்பது, பெரியாழ்வார் திருமொழி.
3. “கற்கும் கல்விக்கு எல்லை
இலனே என்னும்” என்பதற்கு, அருளிச்செய்த
பொருள் மூன்றனுள், இரண்டாவது பொருளைக் கடாக்ஷித்து
அவதாரிகை
அருளிச்செய்கிறார் ‘அவற்றால்’ என்று தொடங்கி.
4. கற்கும் கல்வி ஆகிறவன்
இவனே என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘நீரே கல்வி’ என்று.
“த்வமேவ மாதாச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச குரு: த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம்
த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ”
என்பது, சுலோகம்.
5. அவ்வக்காலங்களில்
- படைக்கும் காலந்தோறும்.
|