|
க
காண்கின்ற கடலெல்லாம்
யானே என்னும்
காண்கின்ற
கடல்வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற
உலகத்தீர்க் கென்சொல் லுகேன்?
காண்கின்ற
என்காரிகை செய் கின்றவே.
பொ-ரை :- பார்க்கப்படுகின்ற பூமி முழுதும் யானே என்பாள்,
பார்க்கப்படுகின்ற ஆகாய முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கொடிய நெருப்பு முழுதும்
யானே என்பாள், பார்க்கப்படுகின்ற இந்தக் காற்று முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற
கடல் எல்லாம் யானே என்பாள், காட்சிக்கு இனியதான கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன்
ஆவேசித்தானோ? எல்லாவற்றையும் காணவல்ல என்மகள் செய்கின்றவற்றை, காண்கின்ற உலகத்தை ஒழிய
வேறு ஒன்றனையும் அறியாத உங்களுக்கு எதைச் சொல்லுவேன்?
ஈடு :- மூன்றாம்
பாட்டு. 1காரணமான மண் முதலான பூதங்கள் ஐந்தும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.
காண்கின்ற நிலம்
எல்லாம் யானே என்னும்-2காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடியாதபடியான பரப்பையுடைத்தான
பூமி எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். இப்படி இருக்கிற இதுதான் காரிய உருவமாக
இருக்கின்ற மண்ணே அன்றோ, கண்களுக்குத் தோற்றுகிற இது இவ்வளவானால், இதற்குங்கூடக் காரணமாய்த்
தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது இவ்வளவு அல்லவே அன்றோ. காண்கின்ற
விசும்பு எல்லாம் யானே என்னும்-காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடிய ஒண்ணாதபடியாய்,
இது தனக்குங் கூட இடத்தைக் கொடுக்கிற ஆகாயமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற
வெம் தீ எல்லாம் யானே என்னும் - அப்படிப்பட்ட ஒளியுள்ள பொருளும் நான்
_____________________________________________________
பிள்ளை என்று பொருள் கூறுக. காண்கின்ற
- கண்டு சொல்லுகின்றவற்றை.
1. “நிலம்” முதலான காரியங்களைக்
காட்டுகின்ற சொற்கள், காரணத்தைக்
காட்டுகின்றன எனக்கொண்டு அவதாரிகை அருளிச்செய்கிறார்
‘காரணமான’ என்று தொடங்கி.
2. “காண்கின்ற” என்றதற்கு
இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். ஒன்று,
காரணபூமி; மற்றொன்று, காரியபூமி. அவற்றில் காரியபூமியை
அருளிச்செய்கிறார் ‘காணப்புக்கால்’ என்று தொடங்கி. காரணபூமியை
அருளிச்செய்கிறார் ‘இப்படி
இருக்கிற’ என்று தொடங்கி. இரண்டாவது
பொருளில் காணுதல், சாஸ்திரங்களைக் கொண்டு காணுதல்.
|