|
உள
உள்ளவன் ஆனான்; ஆதலால்,
எத்தகைய பெரிய பாவங்களைச் செய்தவர்கட்கும் புண்ணியம் வாய்க்குமிடத்தில் வாய்த்தே விடும்
என்கிறார்.
வி-கு :-
‘எவ்விடத்தான்’ என்பது, பரமபதத்திலே உள்ள தன்மையைக் காட்டுகிறது. பாவியர்க்கும் உம்மை,
இழிவு சிறப்பு. வாய்க்கின்று என்பது, கின்று விகுதிபெற்ற வினையெச்சம்.
ஈடு :- ஏழாம்
பாட்டு. 1அவன் கிருபையாலே தாம் பெற்ற பேற்றினைக் கண்டு ஆச்சரியத்தை அடைந்தவராய்ப்
பகவானுடைய கிருபை நடையாடாநிற்க, சிலர்க்கு ‘நான் தீவினையேன்’ என்று இழக்க வேண்டா என்கிறார்.
அம்மான் - சர்வேச்வரன்.
ஆழிப்பிரான் - கையும் திருவாழியுமான அழகை 2நித்தியசூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்குமவன்.
அவன் எவ்விடத்தான் - அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்தியசூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.
யான் ஆர் - நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான். 3பிள்ளையமுதனார்,
‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.
எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - எல்லா வழியாலும் மஹாபாவத்தைப்
பண்ணினவர்கள் பக்கலிலும் பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர். பகவானுடைய
கிருபை பெருகப் புக்கால் 4‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.
5நீர் கிட்டினபடி என்? என்ன, கைம் மா துன்பு ஒழித்தாய்
_____________________________________________________
1. “விதி வாய்க்கின்று” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘அவன்
கிருபையாலே’ என்கிறார். ‘தாம் பெற்ற பேற்றினை’ என்றது, “என்
மேலானே” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. “எம் மா பாவியர்க்கும்”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்துப் ‘பகவானுடைய
கிருபை’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. “அவன் எவ்விடத்தான்” என்றதனை நோக்கி,
‘நித்தியசூரிகளுக்குக் காட்சி
கொடுத்துக்கொண்டிருக்குமவன்’ என்கிறார். “பிரான்” என்பதனால்,
காட்சி
கொடுத்துக்கொண்டிருத்தல் பெறுதும்.
3. மேலே அருளிச்செய்த பொருளுக்குச் சம்வாதம்
காட்டுகிறார்
‘பிள்ளையமுதனார்’ என்று தொடங்கி.
4. ‘கரையிலே நின்றோம்’ என்றது, கர்மமாகிய
கரையிலே நின்றோம் என்று
தப்ப விரகு இல்லை என்றபடி.
5. ‘நீர் கிட்டினபடி என்?’ என்றது, பகவானுடைய
கிருபை எங்கும்
பெருகுகிறபடியை நீர் அறிந்தபடி என்? என்னில் என்றபடி.
|