பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
280

    ஈடு :- முதற்பாட்டு. 1என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை, இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு; பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்; ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் - 2கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார். 3“ந தர்ம நிஷ்டோஸ்மி - கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது, நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கைவிடுகைக்கும் வேண்டுவது உண்டு; ஆனால் பலத்தோடே

____________________________________________________

1. “நோற்ற நோன்பிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என்னுடைய’
   என்று தொடங்கியும், “ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத்
   திருவுள்ளம்பற்றி ‘ரக்ஷகன் வேண்டும்’ என்று தொடங்கியும்,
  “சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக்
  ‘காத்தற்குரிய பொருள்களை’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
   மேல் திருப்பாசுரத்திலே “அருளாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
  ‘என் விருப்பத்தை முடித்தருள வேண்டும்’ என்கிறார்.

2. “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று இப்படிச் சொன்ன பேர்
   உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கர்ம யோகத்தில்’
   என்று தொடங்கி. ‘என்கிறார்’ என்றது, ஸ்ரீஆளவந்தாரை.

  “ந தர்மநிஷ்டோஸ்மி நச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
  அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாதமூலம் ஸரணம் ப்ரபத்யே”.

  என்பது, ஸ்தோத்திர ரத்நம். இது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.

3. மேலே காட்டிய சுலோகத்திற்கு விரிவுரை அருளிச்செய்கிறார் ‘ந
  தர்மநிஷ்டோஸ்மி’ என்று தொடங்கி. “தர்மவாந்நாஸ்மி” என்னாது, “ந
  தர்மநிஷ்டோஸ்மி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’
  என்று தொடங்கி. என்றது, பல சாதனத்தைத் தொடங்கிய மாத்திரமே
  ஒழிய, சாதனத்தை அநுஷ்டித்து, ‘பலம் கைவரும்’ என்று நிச்சயிக்கத்
  தக்கது இல்லை என்றபடி.