பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
299

New Page 1

    பொ-ரை :- பகைவர்களாகச் சேர்ந்த சேனையையுடைய துரியோதனன் முதலிய நூறு பேர்களும் அழியும்படி, தனியரான பஞ்சபாண்டவர்களுக்காக வஞ்சனையையுடைய போரைச் செய்து சாம்பலாகச் செய்த என் தந்தையே! பிரளயம் கொண்ட பூமியை எடுத்து வந்த அம்மானே! தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே சூடி ஏறி வீற்றிருந்தவனே! உன்னை அடைவதற்கு எந்த விதமான முயற்சியைச் செய்வேன்?

   
வி-கு :- மாயப் போர் பண்ணி நூற்றுவர் மங்க நீறுசெய்த எந்தாய் என்க. ஞானத்தாருடைய வேதமும் வேள்வியும் என்க. உன்னை எய்த எங்குக் கூவுவன்? ஓர் என்பது, வேறு துணை இன்மையைக் காட்ட வந்தது.

    ஈடு :-
நான்காம் பாட்டு. 1‘வெறும் உன் கிருபையாலே காத்தருள வேண்டும்’ என்னாநின்றீர், நாம் இதற்கு முன்னர் அங்ஙனம் செய்த இடம் உண்டோ? என்ன, ஒன்று இரண்டு உதாஹரணங்களை எடுத்துக்காட்டி. இங்ஙனே செய்தது இல்லையோ, எனக்கும் செய்தருள வேண்டும் என்கிறார்.

    மாறு சேர் படை நூற்றுவர் - 2பகைவர்களாய்க் கொண்டு வந்து சேர்ந்த படையையுடைய நூற்றுவர். 3துரியோதனாதியர்கட்குத் துணையாளராய் வருகை அன்றிக்கே, தனித்தனியே பகைவர்களாய் வந்து கிட்டினார்களாதலின், ‘மாறுசேர்’ என்கிறது. 4அன்றிக்கே, படையோடு கூடிப் பகைவர்களாய்ச் சேர்ந்த

___________________________________________________

1. “ஐவர்க்காய்” என்பது போன்றவைகளையும், “நிலங்கீண்ட அம்மானே”
   என்றதனையும் கடாக்ஷித்து, வினாவும் விடையுமாக அவதாரிகை
   அருளிச்செய்கிறார்.

2. “மாறுசேர்” என்பதனைப் “படைக்கு” அடைமொழியாக்கிப் பொருள்
   அருளிச்செய்கிறார் ‘பகைவர்களாய்க் கொண்டு’ என்று தொடங்கி.

3. துரியோதனன் முதலானோர்கட்குத் துணையாக வந்தவர்களாகையாலே
  இவர்களும் பகைவர்கள் என்பதுதானே போதருமேயன்றோ?
  அங்ஙனமிருக்கவும், “மாறுசேர்” என்று விசேடிப்பான் என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘துரியோதனாதியர்கட்கு’ என்று தொடங்கி.

4. ‘அன்றிக்கே’ என்று தொடங்கிக் கூறும் பொருளில், “மாறுசேர்” என்பது
  “நூற்றுவர்க்கு” அடைமொழி. ‘பகைவர்களாய்’ என்றது, கிருஷ்ணனுக்குப்
   பகைவர்களாய் என்றபடி. துரியோதனன் முதலானோர், கிருஷ்ணனுக்குப்
   பகைவர்களோ? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பகைவனுடைய’
   என்று தொடங்கி.