|
New Page 1
தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய்,
1அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக்கொண்டவனே! கரு
மாணிக்கச் சுடரே - நப்பின்னைப் பிராட்டியுடைய தடைகளைப் போக்கி, 2அவளுக்குக்
கொடுத்த உடம்பின் வாசியை எனக்கும் அறிவித்தவனே! தெள்ளியார் - 3தங்கள் தங்களுக்கும்
சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள். 4இவர்கள்
ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது, “இராமபிரானுடையவும் அறிவிற்சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும்
அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே, அசோக வனத்திலே தனியிருப்பில்
பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி. அன்றிக்கே, 5“சுக்கிரீவ
மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”
___________________________________________________
1. “என்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவை எல்லாம்’ என்று
தொடங்கி.
2. “என்” என்றதனை, கருமாணிக்கச்
சுடரிலும் கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவளுக்குக் கொடுத்த’ என்று தொடங்கி.
3. “தெள்ளியார்” என்பதற்கு,
இரண்டு தாத்பரியம்: முன்னையது தங்கள்
முயற்சிகளை விட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள் என்பது,
இதனையே
அருளிச்செய்கிறார் ‘தங்கள்’ என்று தொடங்கி.
4. ஞானம் உண்டானால் சாதநாநுஷ்டானம்
செய்யவேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்கள் ஞானத்துக்கு’ என்று
தொடங்கி.
இதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இராமபிரானுடையவும்’
என்று தொடங்கி.
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய
ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே
தேவீ கங்கேவ ஜலதாகமே”
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
5. இரண்டாவது தாத்பரியம்,
அவன்தான் நலியும்போதும் அவன் கையைப்
பார்த்திருக்கும்படி தெளிந்த ஞானத்தை உடையவர்கள் என்பது.
இதனையே அருளிச்செய்கிறார் ‘சுக்கிரீவ மஹாராஜரையும்’ என்று
தொடங்கி.
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண
மஹதா மஹாந்
ஸு க்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய
கஸ்தஏவ விபீஷண:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 17
: 9.
|