பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
322

New Page 1

செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர். ஆறு - வழி. வழி - உபாயம். 1“எவ்வாறு நடந்தனை”, “இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்” என்னக்கடவதன்றோ. 2சரண் - உபேயம். அன்றிக்கே. 3“இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர். 4ஆறு - உபாயம். “சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்; இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம். ஆக, 5எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி. வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக்காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால். 6“நோற்ற நோன்பிலேன்”

___________________________________________________

1. “ஆறு” என்பது, வழி என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்
   காட்டுகிறார் ‘எவ்வாறு’ என்று தொடங்கி.

      “எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என்
  செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2. “இப்பொய்கைக்கு”
  என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.

2. பிள்ளான் நிர்வாஹத்தில், “சரண்” என்பது, இல்லமாய் அதனாலே,
  உபேயத்தைச் சொல்லுகிறது என்று கோடல் வேண்டும்.

3. ‘இவை இரண்டாலும்’ என்றது, “ஆறு, சரண்” என்ற இந்த இரண்டு
  சொற்களாலும் என்றபடி.

4. பட்டர் நிர்வாஹத்திலே சப்த நிர்வாஹம் காட்டுகிறார் ‘ஆறு உபாயம்’
  என்று தொடங்கி.

  “உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம்
   வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:”

  என்பது, பாஞ்சராத்திரம்.

5. “எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றது,
   எனக்கு உபாயம் தருமிடத்தில் வேறு ஒன்றனைத் தாராமல் உன்
   திருவடிகளையே உபாயமாகச் செய்து தந்தாய் என்றபடி” என்று பெரிய
   சீயர் அருளிச்செய்வர். ஆகையாலே, பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு
   ஆறு தருமிடத்தில், நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று
   சொற்களைக் கூட்டிக் கோடல் தகும். எனக்கு - வேறு கைம்முதல்
   இல்லாத எனக்கு.

6. “ஆறு, சரண்” என்ற இரண்டனையும் உபாயபரமாகப் பட்டர்
   அருளிச்செய்வதற்கு நியாமகம் யாது? என்ன, இடத்திற்குத் தகுதி
   ஆகையாலே என்று அருளிச்செய்கிறார் ‘நோற்ற நோன்பு’ என்று
   தொடங்கி.