|
என
என்னுமித்தனை. மால் -
வியாமோகம். நெடுமால் - மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை. அன்றிக்கே, மால் என்று பெரியோன்
என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் -
1மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்; சர்வேச்வரன்
என்றபடி. 2அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.
சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் - மிக்க கனத்தையுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக்கண்
வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு கைங்கர்யம் செய்வாரைப்போலே அசையாநிற்கும். சீர் - கனமும்,
அழகும். ‘கவரி வீசும்’ என்றது, கவி போலே வீச என்றபடி. கவரி - சாமரை.
3அன்றிக்கே,
ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடியாகிற சீர்மையையுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார்
என்னுதல். அப்போது “நான் சர்வேச்வரனுக்கு போக்யன்” என்கிற சீர்மை. 4“மரங்கள்
எல்லாம் காலம் அல்லாத காலத்திலும் பயன் அளிக்கக் கடவன” என்னுமாறு போலே, எம்பொழுதும் செந்நெற்கள்
உள்ளன என்பார் ‘வீசும்’ என 5நிகழ் காலத்தாற் கூறுகிறார்.
____________________________________________________
1. ஆருயி ரேயோ!
அகலிட முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயி ரேயோ! பெரியநீர்
படைத்துஅங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த
சீருயி ரேயோ! மனிசர்க்குத்
தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!
ஓருயி ரேயோ! உலகங்கட்
கெல்லாம் உன்னை நான் எங்குவந் துறுகோ.
என்பது, திருவாய். 8. 4 : 5.
2. சௌலப்யம் போன்று, மேன்மையும்
ஈடுபடுத்தக் கூடுமோ? என்ன,
‘அவனுடைய பெருமையும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
3. “அஹமந்நம் அஹமந்நம்
அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத:
அஹமந்நாத:” என்பது, தைத்திரீய. உப. ப்ரூ. 10.
4. “அகால பலிநோ வ்ருக்ஷா
: ஸர்வே”
இதனை, மேலே காணல் தகும்.
5. முக்கா லத்தினும் ஒத்தியல்
பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத்
தானே.
என்பது, இலக்கணம்.
|