பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
352

மற

மற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர். கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்-1இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள் அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ. “செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்றாரே அன்றோ. கண் ஆர் மதிள்-தொழில் மிக்க மதிள் என்னுதல். செம்பாலே செய்யப்பட்ட மதில் என்னுதல். ‘கன்’ என்பது, தொழிலும், செம்பும், சிக்கெனவும் எனப் பல பொருள்படும் ஒருசொல்.

    அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹமாய்த் தனக்கு உரித்தல்லாத இந்த ஆத்மவஸ்து. வாழ்நாள் செல்நாள் எந்நாள்-ஜீவித்துக்கொண்டு செல்லும்நாள் யாதொருநாள். அந்நாள்-அந்த நாட்கள் முழுதும். உன தாள் பிடித்தே செலக்காணே-உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும். 2காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். 3‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்; இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி

____________________________________________________

  அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது, ‘பிராப்பியம்
  ஒரு பரமசேதனம்’
என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’
  என்கையாலே, இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது
  போதரும்.

1. “கன்னார்மதிள்” என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘இவருடைய’ என்று
  தொடங்கி. தம் முயற்சி என்பது ஒன்றும் இல்லாதவரான இவர், அத்தலைக்கு
  ரக்ஷை தேடுவான் என்? என்ன, அதற்கு விடையும் மேற்கோளும்
  அருளிச்செய்கிறார் ‘அவனே உபாயமும்’ என்று தொடங்கி. ‘செவ்வடி
  செவ்வி’ என்றது, திருப்பல்லாண்டு. ‘என்றார்’ என்றது, பெரியாழ்வாரை.

2. ‘காற்கூறும் விடாதபடி’ என்றது சிலேடை. இது, “உன தாள் பிடித்தே செலக்
  காணே” என்பதன் பொருள்.

3. “உன்னால் அல்லால்” என்பது போன்றவைகளால், நீயே உபாயம் என்றால்,
  விரோதியைப் போக்கிக் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும் என்னாமல்,
  “உள தாள் பிடித்தே செல்லும்படி பார்த்தருள வேண்டும்” என்பது என்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒன்றும் குறை வேண்டேன்’
  என்று தொடங்கி.