பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
372

    ஈடு :- பத்தாம் பாட்டு. 1‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமையாலே, இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.

   
வாராஅருவாய்-வாராத அருவாய். என்றது, 2புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி. அருவாய் வரும் என் மாயா - மறந்து பிழைக்க ஒண்ணாதபடி 3அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே! ‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது. மாயா மூர்த்தியாய் - நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே! 4“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களையுடையனவாயன்றோ இருப்பன. ஆராவமுதாய்-நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே! அடியேன் ஆவியகமே தித்திப்பாய்-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே! 5தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத, உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து, ‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே! அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே, “தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமான

_____________________________________________________

1. “உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ” என்பதனைக்
   கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “வரும்என் மாயா” என்னாநிற்க, “வாரா வருவாய்” என்கிறது என்?
   என்ன, ‘புறத்திலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘அகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய்,
  அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.

4. “மாயா” என்ற விசேடணத்தின் பொருளை அருளிச்செய்கிறார்
  ‘அல்லாதாருடைய’ என்று தொடங்கி.

5. “தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்” என்பதற்கு, இரண்டு
   வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். இரண்டாவது பொருளில்,
  “வினை” என்றது, பிரிவால் உளதாய துன்பம். தீர - தீர்ந்து.