|
மஹ
மஹாபாவத்தைப் பண்ணின
நான், நாடோறும் தொடர்ந்து வருகிற வியசனத்தாலே மெலிவினையுடையவளாக. 1ஒரு நாள்
மெலியப் பொறுக்கமாட்டாத தன்மையினையுடையவள் காண்! நெடுநாள் நோவு படுகிறாள். திருவடி கண்டு
போந்த பின்பு பிராட்டி படுவனவெல்லாம் படுகிறாளாயிற்று இவளும். ஓர் இரவின் வியசனத்தைத் திருவடி
பொறுக்க மாட்டிற்றிலன் அன்றோ; 2“இமாம் அஸித கேஸாந்தாம்-மை வண்ண நறுங்குஞ்சியையுடையவர்க்கும்
பேணத் தகும் குழலையுடையவள்காண். ஸதபத்ர நிபேக்ஷணாம் - ‘கமலக்கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டுகொண்டிருக்கத்
தக்க கருங்கண்களையுடையவள் காண். ஸுகார்ஹாம்-அவர் மடியிலே இருக்கத் தகுமவள். துக்கிதாம் த்ருஷ்ட்வா-இந்த
இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு. மமாபி வ்யதிதம் மந:- இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய
நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.” இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி. வினையேன் -3நாள்செல்ல
நாள்செல்ல ஆசை கழியாதபடியான பாவத்தைச் செய்தேன். மெலிய, திருவல்லவாழ் உறையும் என்னுதல்.
மெலிய-நீர்ப்பண்டமாய் அழிகிறபடி.
வான் ஆர் வண்
கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை - 4இதனால்,
இத்தலை மெலிய மெலிய அத்தலை
____________________________________________________
1. இவள் நாள்தோறும் மெலிவதற்குப்
பிராட்டியின் மெலிவினைத்
திருஷ்டாந்தம் காட்டுவதற்குத் திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார் ‘ஒருநாள் மெலிய’ என்று தொடங்கி. ‘திருவடி கண்டு
போந்த பின்பு’ என்றது,
இலங்கையிலே போந்து பிராட்டியைக் கண்ட
பின்பு என்றபடி. பிரிவுற்ற நிலையிலே பிராட்டி பட்ட
படிக்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘இமாம்’ என்று தொடங்கி.
“இமாம் அஸித கேசாந்தாம்
ஸதபத்ர நிபேக்ஷணாம்
ஸு கார்ஹாம் துக்கிதாம்
த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
2. ‘இமாம்’ என்ற சுலோகத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘அஸித’
என்று தொடங்கி. ‘அஸித கேசாந்தாம்’ என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘மைவண்ணம்’ என்று தொடங்கி. இங்கே,
திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம்
அதுசந்தேயம். பேணத்
தகும்-ஆசை படத்தகும்.
3. “வினையேன்” என்பதற்கு,
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘நாள்
செல்ல’ என்று தொடங்கி.
4.
“மெல்லிய, வானார்” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘இதனால்’
என்று தொடங்கி. அன்றிக்கே,
“மெலிய, கோனார்” என்று
|