|
New Page 1
தேனார் சோலைகள்’
என்கிறாள். ஆக, வானார்வண் கமுகுகள் தேன்
வெள்ளத்திலே அலைந்து, பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
1இருவரும் கூட இருந்து மதுபானம் பண்ணிக் களிக்க வேண்டியிருக்க, நான் மெலியத் தாமே
மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், ‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ்
உறையும் கோனாரை’ என்கிறாள். பாவியேன், இவ்வளவிலே 2“மதுவையும் குடிப்பது
இல்லை” என்ன வேண்டாவோ.
3இவர்,
இவ்வாற்றாமையோடே இருந்து சோலையைக் கவி பாடுகிறது, உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும்
இனிய பொருளாக இருக்கையால் அன்றோ. 4மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு,
தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும்.
யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே. நித்தியப் பிராப்பியனாய்க்
கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது
____________________________________________________
1. “மெலிய” என்றதனை
“வானார்” என்றதனோடே கூட்டிக் கருத்து
அருளிச்செய்தார் இதுகாறும். இனி, “மெலிய” என்றதனைத்
“திருவல்லவாழ்
உறையும்” என்றதனோடு கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘இருவரும்’
என்று தொடங்கி.
இதனை, ‘இத்தலை மெலிய மெலிய’ என்ற
வாக்கியத்தின் விவரணமாகக் கண்டு கொள்வது.
2. “ந மாம்ஸம் ராகவோ
புங்க்தே ந சாபி மது ஸேவதே”
என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.
திருவடி கூறியது.
3. பிரிவின் துன்பத்தாலே
நோவுபடுகிறவர் சோலையை வர்ணிப்பான் என்?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர் இவ்வாற்றாமை’
என்று
தொடங்கி. என்றது, அவனைப் போன்று போக்யமாயிருக்கையாலே
வர்ணிக்கிறார் என்பது
கருத்து.
4. வர்ணிப்பதற்கு
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘மனத்தினை’
என்று தொடங்கி. என்றது, நித்தியசூரிகள்
இவற்றின் உருவமாக வந்து
நிற்கையாலும் வர்ணிக்கிறார் என்றபடி. ‘கண்களுக்கு இலக்கு
ஆக்கிக்கொண்டு’
என்றதன் விவரணம் ‘யாவர்க்கும்’ என்று தொடங்கும்
வாக்கியம். பிரபத்திக்கு அடைத்த நிலம்
அர்ச்சாவதாரமாகையாலே
‘உபாய பாவத்தில் நிலை’ என்கிறார். மேலே அருளிச்செய்த வாக்கியத்தை
விவரிக்கிறார் ‘நித்தியப் பிராப்பியனாய்’ என்று தொடங்கி.
பிராப்பியன்-அடையத்தக்கவன்.
|