பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
388

எண

எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது, முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம். 1பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ. நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரணதசையிலே பட்டர் எழுந்தருளி, ‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வசக்தி உபகரிக்கும்போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன, ‘அது என், உன் தேசத்தைவிட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன, ‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து, உம்முடைய திருவடிகளை அடையச்செய்து ருசியை விளைப்பித்து, இத்தேசத்திலே உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகாநிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என்கொண்டு?’ என்ன, ‘பிரமாணம்கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான். 2கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.

____________________________________________________

  பிரத்தியக்ஷமாகத் தோற்றும்; ஆன பின்பு, பிரமாணத்தால் உண்டாகின்ற
  பரோக்ஷ ஞானத்தை நோக்க, நேரே பார்த்தலால் உண்டாகும் ஞானம்
  வேறுபட்டது என்றபடி.

1. பிரமாணத்தாலே பிரதிபத்தி விளையக் கண்ட இடம் உண்டோ? என்ன,
  அதற்கு ஐதிஹ்யம் காட்டுவாராகத் தொடங்குகிறார் ‘பிரமாணத்தை’ என்று
  தொடங்கி. ‘பிரமாணங்கொண்டு நினைத்திருந்தேன்’ என்கிற இவ்விடத்தில்,

  “ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா
   விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை:
   ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”

  என்பது, அநுசந்தேயம். மேலும்,

      திருவாய்மொழி 2-ஆம் பத்து 3-ஆம் திருப்பதிகம் 2-ஆம் திருப்பாசுரம்
  அவதாரிகையும், “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண
  ஸ்ரீ சூக்தியும் நினைவு கூர்தல் தகும்.

2. ‘ஆசாரிய அங்கீகாரத்தாலே மோக்ஷம்’ என்று சொல்லுகிற
   பிரமாணந்தானே, ‘தன் முயற்சியை மூலமாகக் கொண்ட பக்தியாலே
   மோக்ஷம்’ என்று சொல்லுகையாலே, நிச்சய ஞானம் பிறக்க