பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
401

பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள். 1எல்லாவளவிலும் இவர்க்கு வேதத்திற்கிடக்கிற பிராவண்யம் பாரீர், 2முதல் வார்த்தைதான் “உளன் சுடர்மிகு சுருதியுள்” என்பதேயன்றோ. 3“யாதொருவனுடைய ஸ்வரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ” என்றும், 4“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும், 5“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

    மாடு உயர்ந்து ஓமப்புகை கமழும் 6“ஓத்துச்சொல்லிச் சொல்லாத விடமெல்லாம் வைதிகக் கிரியைகளேயாய்க் கிடக்குமித்தனை. மாடு - பக்கம். ஆகாசமடங்கலும் இடமடைத்து, வைமானிகரை முகம்பார்த்து அநுபவிக்க வொட்டாதபடி எழா நின்றது. 7“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்திபெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”

___________________________________________________

  அதில் - கடல் ஒலியில். ஆனால், அநத்யயன காலங்களில் ஓதலாமோ?
  எனின், தர்சபூர்ணமாசங்களிலும் யஜ்ஞகிரியாசேஷமானவை சொல்லலாம்
  என்பர். தர்சபூர்ண மாசங்கள் - பக்ஷங்களில் செய்யப்படும் யாகம்.

1. பிராட்டியான நிலையிலும் வேதத்தைச் சொல்லுகிற ஸ்ரீ சூக்தியை
  அநுசந்தித்து வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘எல்லாவளவிலும்’ என்று
  தொடங்குவது. ‘எல்லாவளவிலும்’ என்றது, தாமான தன்மையோடு
  பிராட்டியான தன்மையோடு வாசியற எல்லா அவஸ்தைகளிலும் என்றபடி.

2. ‘எல்லாவளவிலும்’ என்கைக்கு, தாமான தன்மையில் வேதத்தைச்
  சொன்னவிடம் உண்டோ? என்ன, ‘முதல் வார்த்தைதான்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். “உளன் சுடர்மிகு” என்பது, திருவாய்.
  1. 1 : 7.

3. “ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.

4. “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.

5. ‘வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:” என்பது.

6. “மாடு” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘ஓத்துச் சொல்லி’
   என்று தொடங்கி.

7. பலம் கிடைத்தபின், கர்மங்களைச் செய்வதில் நின்றும் நீங்கியிரார்களோ,
  “கமழும்” என்று நிகழ்காலமாகச் சொல்லுவான் என்? என்ன, ஞானாதிகர்
  ஆகையாலே பலத்தில் நினைவு இல்லை என்கிறார் ‘கர்மங்களை’ என்று
  தொடங்கி.

  “கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய:
   லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”


  என்பது ஸ்ரீகீதை. 3 : 20.