பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
404

மாராகச் சொல்லுகிறீர்களோ, இத்தனை பேர் ஸ்வரூபஞானமில்லாதார் உளர் ஆனீர்களே. 1ஒன்று சொல்லுவார் சொல்லும்போது தம்மை அறிந்தன்றோ சொல்லுவது. நீர் எம்மை-உங்களை அழியமாறியும் என்னுடைய ஜீவனமே எண்ணக்கூடிய நீங்கள், உங்களுடைய நல் வார்த்தை நெஞ்சிற்பட்டால் ஜீவியாத என்னை. தாங்கள் தாங்கள் நலிவு பட்டும் பிறரை நோக்குவார், தாங்களே பிறரை நலியவும் பார்ப்பாரோ என்பாள் ‘நீர் நலிந்து’ என்கிறாள். நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ என்பாள் 2‘என் செய்தீரோ’ என்கிறாள். அன்றிக்கே, என் செய்தீரோ என்பதற்கு, 3ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத்தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும் கைவாங்க வேண்டாவோ என்னுதல். எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ - 4பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு, “மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள் என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

   
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் 5-அந்நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க

____________________________________________________

1. ‘நீங்கள் நீங்களாய்ச் சொல்லுகிறீர்களோ’ என்றதனாற் பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார் ‘ஒன்று சொல்லுவார்’ என்று தொடங்கி.

2. “என் செய்தீரோ” என்றது, என்ன பிரயோசனத்தைப் பெற்றீர்கோள்
   என்றபடி.

3. என்னுடைய உயிருக்கு நாசத்தை உண்டாக்குகின்றீர்களே ஒழிய, வேறொரு
  பிரயோஜனம் இல்லை என்று மேலே அருளிச்செய்து, உங்கள் ஹிச
  வசனத்துக்கு நான் மீளாத பின்பு உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை
  என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘ஒன்று செய்வது’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘லாபாலாபம்’ என்று தொடங்கி.

4. நலிவதற்குப் பிராப்தி இல்லையாகில், பின் எதற்குப் பிராப்தி உண்டு?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிராவண்யத்தை’ என்று
  தொடங்கி.

5. “பச்சிலை என்று தொடங்கி, அவ்வூரை வர்ணிப்பதற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘அந்நிலத்திலே’ என்று தொடங்கி.