பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
409

உண

உண்டாயிற்று?” என்றது, குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜபுத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே; 1சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன, மேல் 2இதற்குக் காரணம் சொல்லுகிறான். 3“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;” 4தங்களையும் அறியாதே எங்களையும் அறியாதே இங்ஙனே விழுந்து கொடு நிற்கக் கண்டோமித்தனை. அதாவது, இளையபெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்துகொண்டு நின்று நோக்கக்கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு அடியேன் வரும்படியன்றோ அவர்கள் ஒருங்கு சேர்ந்தபடி. 5இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும் திருவடியைக்கொண்டு இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி; இளையபெருமாள் பேர நிற்கையன்றோ பிரிய வேண்டிற்று. “ஏவம் ஸமஜாயத -

___________________________________________________

1. விலங்குகளுக்குக் குருகுல வாசத்திற்கு யோக்கியதை இல்லையா? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சாஸ்திரங்களை’ என்று தொடங்கி.

2. இதற்குக் காரணம்-நட்பிற்குக் காரணம். ‘சொல்லுகிறான்’ என்றது,
  திருவடியை.

3. “ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத”
   என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 32.

  என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.

4. “ஏவம் ஸமஜாயத - இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று
   வகையாகப் பாவம் அருளிச்செய்கிறார். அவற்றுள், முதலது, ‘தங்களையும்’
   என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக்
   காரியத்திற்கு அடியேன் வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று
   கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
   தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல்
   நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.

5. இரண்டாவது பாவத்தை அருளிச்செய்கிறார் ‘இளையபெருமாள்
  அடிமையில்’ என்று தொடங்கி. என்றது, தம்பியான இளையபெருமாளுடைய
  அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த
  ரங்கர், இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று
  தொடங்கி.