|
New Page 1
தொடக்கமான பூசல் உள்ளனவற்றையெல்லாம் நினைக்கிறது.
ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டு - அறிவு பிறப்பதற்கு முன்பு சத்தையே பகைவர் அழிவதற்கு உடலாயிற்று,
1இருள் ஒளிகள் ஓர் இடத்தில் சேர்ந்திருத்தல் இல்லை அன்றோ; பருவம் நிரம்பின
பின்பு அநுகூலர்க்குக் கையாளானபடி. ‘திறங்கள்’ என்றது, தூது சென்றும், தேரை ஓட்டியும்,
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும், எதிர்கள் உயிர்நிலைகளைக்காட்டிக்கொடுக்கை
தொடக்கமானவற்றையெல்லாம் சொல்லுகிறது. செய்து - இப்படிச் செய்து. போன மாயங்களும் -
2அடியார்களைக் காப்பாற்றுவதற்காக வந்து பிறந்து அவர்களுடைய ஆபத்துக்களைப் போக்கி
உபகரித்தால், ‘இது நமக்காகச் செய்தானன்றோ’ என்று இருக்கையன்றிக்கே, இவன் தன்னோடே எதிரிடும்படியான
சம்சாரத்திலே இராமல், ஓரவசரத்திலே இங்கு நின்றும் போன ஆச்சரியமான செயல்களும். என்றது,
3“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தையெல்லாம்
மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து,
அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரையடைய முட்கோலுக்கு இரையாக்கி,
அனுகூலரையடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவுபடுத்தி, இங்கு நின்றும் போய்த்
தப்பப் பெறுவதே! என்கிறது. “ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் - தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே,
இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.
நிறந்தனூடு புக்கு-தோல்
_____________________________________________________
1. சத்தை மாத்திரமே பிரதிகூலர் அழிவதற்குக்
காரணம் ஆமோ? என்ன,
‘இருள் ஒளிகள்’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. அவதரித்தது குணமாமே ஒழிய, போனது குணமாய்
உருகுவதற்குக்
காரணமாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அடியார்களை’
என்று தொடங்கி.
3. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘நீண்ட
கண்களையுடைய ஸ்ரீ
கிருஷ்ணன்’ என்று தொடங்கி.
“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா:
ப்ருதுலோசந:
மோஹியித்வா ஜகத்ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”
என்பது, பாரதம்.
|