பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
47

எல

எல்லீரும் வாருங்கோள்; தொழுது தொழுது ஆரவாரிப்போம்; வண்டுகள் படிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்தவனான சர்வேச்வரனுடைய அடியார்கள் இத்த உலகத்திலே பண்ணோடு பாக்களைப் பாடிக்கொண்டு நின்று ஆடிக்கொண்டு எங்கும் பரந்தவர்களாய்த் திரிகின்றார்கள்.

    வி-கு :-
‘பூதங்கள்’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘திரிகின்றன’ என அஃறிணைச்சொல்லால் முடிந்தது.

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.

    கண்டோம் கண்டோம் கண்டோம் - காணப்பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார். கண்ணுக்கு இனியன கண்டோம்-2”கொடு உலகம் காட்டேலே” என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர, பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம். தொண்டீர் எல்லீரும் வாரீர் - பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், 3பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று இருப்பார் அடையத் திரளுங்கோள். ‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில், தொழுது தொழுது நின்று ஆர்த்தும் - பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கைமேலே பிரயோஜனமன்றோ. ‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அதுதானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி. ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடுகூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.

    வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் - வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையையுடையனாய், திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்

_____________________________________________________

1. “மாதவன் பூதங்கள், தொண்டீர் எல்லீரும் வாரீர்” என்பனவற்றைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திருவாய். 4. 9 : 7.

      ‘பாகவதர்களுடைய கூட்டம்’ என்றது, “இனியன” என்ற பன்மையைத்
  திருவுள்ளம்பற்றி.

3. பெரிய திருமொழி, 7. 4 : 4.