பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
478

    ஈடு :- பத்தாம் பாட்டு. 1சமுத்திரத்தைக் கடைந்த ஆச்சரியமான செயலை நினைத்து நிலைகுலையாநின்றேன், தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி விரகு சொல்ல வேண்டும் என்கிறார்.

    கூடி நீரைக் கடைந்தவாறும் - 2‘நாம் சமமாகப் பிரித்துக்கொண்டு உண்ணக் கடவோம்’ என்று அசுரர்களோடு கூடிச் சமுத்திரத்தைக் கடைந்தபடியும். 3கடைந்து பிடித்துக் காணும் இவருடைய ஆவியை உருக்கிற்று. அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் - பல வேளையில் வந்தவாறே பிரயோஜன ரூபமான அமுதத்தை அநுகூலவர்க்கமான தேவஜாதியே உண்டு, ஆசுரப் பிரகிருதிகள் ‘அமுதத்தை நாய்க்கு இடு’ என்று அதனைவிட்டு அவர்கள் பின் தொடரும்படிக்குத் தகுதியாக, காணத்தக்க பெண்வடிவினைக் கொண்டுபோன ஆச்சரியமான செயலும். 4“விஷ்ணுவானவர் மாயையினால் அசுரர்களை மயங்கச் செய்து பெண்வடிவைக் கொண்டவராய்” என்கிறபடியே, வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் கடைந்தவாற்றாலும் வித்தகத்தாலும். ஊடு புக்கு-தோற்

___________________________________________________

1. திருப்பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பரஸ்பரம் சம்பந்தமில்லாதிருக்க,
  கூடுகையாவது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நாம்
  சமமாக’ என்று தொடங்கி.

3. ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘கடைந்து’ என்று தொடங்கி. கடலைக்
  கடைந்து அமுதத்தை எடுத்த செயலாலே இவருடைய ஆவியை உருக்கி
  என்பது நேர்பொருள். கடைந்து வெண்ணெயைப் பிடித்து உருக்க
  வேண்டும் என்பது வேறும் ஒருபொருள்.

4. பெண் வடிவம் கொண்டதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘விஷ்ணுவானவர்’
  என்று தொடங்கி.

  “மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீரூபமாஸ்த்தித:”
 
  என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.

  நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
  பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் மருவினிய
  தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை
  எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே.

 
என்பது, பெரிய திருமொழி. 2. 6 : 1.