பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
49

பூதங

பூதங்கள் மண்மேல் எங்கும் இடம் கொண்டன என்க. பூதங்கள் கொண்டன என்க.

    ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1நித்தியசூரிகளும் புகுந்து பரிமாறும்படி சம்சாரம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயானார்கள் என்கிறார்.

    திரியும் கலியுகம் நீங்கி - 2“கலியுகத்தில் தந்தையின் வார்த்தையைப் புத்திரன் கேட்க மாட்டான், மருமகளும் மாமியார் வார்த்தையைக் கேட்க மாட்டாள், உடன் பிறந்தவர்களும் மூத்தவன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், வேலைக்காரர்கள் யஜமானன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், மனைவி கணவன் வார்த்தையைக் கேட்க மாட்டாள், இப்படிக் கீழ் மேலாக மாறும்படி ஆகப் போகிறது” என்கிறபடியே, பொருள்களின் தன்மையானது மாறாடும் படியான கலிகாலமானது கழிந்தது. அன்றிக்கே, போவது வருவதாகத் திரிகின்ற கலிகாலம் என்னலுமாம். தேவர்கள் தாமும் புகுந்து-இவ்வருகில் உண்டாக்கப்பட்டவர்களான இந்திரன் முதலான தேவர்கள்; அன்றிக்கே, அவர்கள் சம்பந்தம் சிறிதும் பொறுக்க மாட்டாமல் 3வாந்தி பண்ணும் நித்தியசூரிகளும் அகப்பட ‘இவ்விடம் சம்சாரம்’ என்று பாராமல் புகுந்து என்னுதல். பெரிய கிருதயுகம்

___________________________________________________

1. “தேவர்கள் தாமும் புகுந்து, எங்கும் இடம் கொண்டன” என்பனவற்றைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “ந ச்ருண்வந்தி பிது: புத்ரா ந ஸ்நுஷா ந சகோதரா:
   ந ப்ருத்யா ந களத்ராணி பவிஷ்யதி அதர உத்தரம்”

  என்பது, பாரதம் மோக்ஷ தர்மம்.

  முதற்பெருந் தேவெனும் முகுந்தன் பூசனை
  அதர்ப்பட ஆற்றிடார், அரிய மாமறை
  விதத்தொடு முரணிய விரியும், ஆகம
  மதத்தொடு மருவுவர், மாக்கள் என்பவே.
  மைந்தர்தம் மாமியர் மாமனார் சொலச்
  சிந்தை உண்மகிழ்ந்து தீங்கெனினும் செய்குவர்;
  தந்தையர் தாயர்சொற் சார்ந்து கேட்கலர்;
  நிந்தனை புரிகுவர்; நிலத்தின் என்பவே.

  என்பன, பாகவதம் பன்னிரண்டாங்கந்தம் கலிதன்மம் உரைத்த அத். செய்.
  15. 20.

3. ‘வாந்தி பண்ணும்’ என்றது, தாழ்வினை நோக்கி.