ஸ்ரீ
வியாக்கியானத்தில்
வந்துள்ள உவமைகள்
இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே ஒன்று
பொன்னாய் இருக்குமாறு போலே.
பக். 1,
2.
அமுதம் இருக்க விஷத்தை
விரும்புவாரைப் போலே.
பக். 3.
பெருவிலையனான இரத்தினம்
போலே.
பக். 15.
பரமை காந்திகளைப்
போலே.
பக். 19.
சலகில் கிடந்த முத்துக்கும்
பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லாததைப்போலே.
பக். 23.
இராஜபுத்திரன் வழியிலே
போகாநிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறுபோலே.
பக்.
23.
ஏகாந்த போகத்துக்காகப்
போந்த பிராட்டி அசோக வனத்திலே இருந்தாற்போலே.
பக். 24.
தி்றந்து கிடந்த
வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள்போலே.
பக். 26.
கரிய மேகத்தை
நடுவில் உடையதான மின்னற்கொடி போன்று.
பக். 27.
முட்பாய்ந்தவாறே
‘அம்மே’ என்பாரைப்போலே.
பக். 29.
கலியர் சோறு கண்டாற்போலே.
பக். 29.
இளையபெருமாளும்,
இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல.
பக். 31.
பூவேளைக்காரரைப்போலே.
பக். 34.
அப்போது தோன்றிய
இளஞ்சந்திரனைப் போன்று.
பக். 37.
மலர்ந்த தாமரைத்
தடாகம் போலே.
பக். 39.
எம்பெருமானாரைப்
போலே.
பக். 40.
|