பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
499

    இளையபெருமாள் கையும் வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே.

பக். 406.

    ‘இன்ன மலையின்கட்டி’ என்னுமாறு போலே.

பக். 410.

    தேவர்களுடைய உப்புச்சாறு போல.

பக். 411.

    ‘நான் பட்டது பட, குழந்தை ஜீவிக்கப்பெறுவது காண்’ என்பாரைப் போலே.

பக். 411.

    அப்போது அலர்ந்த தாமரை போலே.

பக். 415.

    மரப்பாவைகளைப் போன்று எழுதின பாவை போன்று.

பக். 416.

    ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப் போல்.

பக். 418.

    இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப் போலே.

பக். 418.

    “வெள்வளை” என்னுமாறு போலே.

பக். 420.

    நாட்டில் இனியவற்றையெல்லாம் சேரக் கேட்டாற் போலே.

பக். 420.

    செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே.

பக். 420, 421.

    அவனுடைய திருநாமங்கள் போலே.

பக். 424.

    அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே.

பக். 425.

    உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று.

பக். 428.

    திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று.

பக். 428.

    பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று.

பக். 436.

    இங்குள்ளார் அடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலே.

பக். 438.

    யமன் வாயிலே விழுந்தாற்போலே.

பக். 441

    இடியினாலே பிளக்கப்பட்ட மரம் போலே.

பக். 442.