|
பூதங
பூதங்கள் - 1“மேகஸ்யாமம்
- நீருண்ட மேகம்போல் கரிய” என்கிற வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாற் போன்று, எழுதிக்கொள்ளும்
சிரமஹரமான வடிவிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள். மண்மேல் இரியப் புகுந்து - 2பெரிய
ஆரவாரத்தோடே சஞ்சரிப்பது நித்திய விபூதியிலே யன்றோ; சம்சாரத்திலே ஆரவாரத்தோடே புகுந்து.
இசை பாடி-பகவானை அநுபவிப்பதனால் உண்டாகும் பிரீதியாலே பாடி. எங்கும் இடம் கொண்டனவே - எங்கும்
தங்களுக்கு இடமாகக் கொண்டார்கள். புறச் சமயத்தாருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் இல்லாதபடி
3சிஷ்யர்களும் சிஷ்யர்களுக்குச் சிஷ்யர்களுமாக எங்கும் பரந்தார்கள். 4“வாநரங்களால்
சூழப்பட்டுள்ள மதில் அகழி இவற்றின் பிரதேசங்களை, வானரங்களால் செய்யப்பட்டதுபோல்
இருக்கிற பிராகாரமாக அரக்கர்கள் கண்டார்கள்” என்கிறபடியே, பிரதிகூலர்க்கு இடம் இல்லாதபடி
ஆயிற்று என்றபடி.
(3)
_____________________________________________________
1. திருமேனிக்கு உவமை
சொல்லுமிடத்து இரண்டனுள் ஒன்றனைக் கூறாது,
முகில், கடல் என்னும் இரண்டனையும் சொல்லுவான் என்?
என்னும்
சங்கையிலே முன்னையதைத் திருஷ்டாந்தமாக்கி அருளிச்செய்கிறார்
‘மேகஸ்யாமம்’ என்று
தொடங்கி.
“மேகஸ்யாமம் மஹாபாஹீம்
ஸ்திரசத்வம் த்ருடவிரதம்
கதா த்ரக்ஷ்யா மஹோராமம்
ஜகத: சோகநாசனம்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 :
8.
2. “மண்மேல்” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பெரிய ஆரவாரம்’
என்று தொடங்கி.
3. “கொண்டன” என்ற பன்மையின்
பொருளை விரிக்கிறார் ‘சிஷ்யர்களும்’
என்று தொடங்கி.
4. பரந்ததற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘வானரங்களால்’ என்று தொடங்கி.
“கிருத்ஸ்நம் ஹி
கபிபி; வியாப்தம் பிராகார பரிகாந்தரம்
தத்ருஸூ ராக்ஷசா
தீநா: பிராகாரம் வாநரீகிருதம்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 41; 97.
|