பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
54

New Page 1

    பொ-ரை :- இதர விஷயங்களில் தொண்டு பூண்டு இருப்பவர்களே! இவர்கள் செய்கின்றது என்னுடைய கண்களுக்கு ஒரு காரியத்தைச் செய்வதுபோன்று இருக்கின்றது; அது யாது? எனின், இந்த உலகத்திலே ஸ்ரீ வைகுண்டநாதனுடைய அடியார்களேயாகித் தங்கள் இச்சையாலே எங்கும் நிலைபெற்று உங்களையும் கொன்று இந்தக் காலத்தையும் மாற்றி விடுவார்கள் போலே இருக்கின்றது; இதில் சந்தேகம் இல்லை; ஆதலால், அரக்கர்களாயும் அசுரர்களாயும் பிறந்தவர்களாய் இருப்பீர்களேயானால், உங்களுக்குப் பிழைத்தற்குரிய வழியில்லை என்றவாறு.

    வி-கு :-
தொண்டீர்! செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது; இவ்வுலகத்து, வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னிக் கொன்று ஊழி பெயர்த்திடும்; ஐயம் ஒன்று இல்லை; அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் (உங்களுக்கு) உய்யும் வகை இல்லை என்று கூட்டுக. மன்னி - மன்னுதலால், கொன்று ஊழி பெயர்த்திடுவார்கள் என்க.

    ஈடு :- ஐந்தாம் பாட்டு, 1ஸ்ரீ வைஷ்ணவர்கள், அசுர இராக்ஷசரான உங்களையும் முடித்து யுகத்தையும் பேர்ப்பர்கள் என்கிறார்.

    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது - செய்கிறபடி 2பார்த்தேனுக்கு என் கண்களுக்கு ஒன்று போலே இராநின்றது. என்போலே இராநின்றது? என்றால், இவ் வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் - பகவானுடைய குணங்களுக்கு மேட்டுமடையான சம்சாரத்தில் நித்தியவிபூதியில் இருப்புக்குத் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய். மாயத்தினால் எங்கும் மன்னி-3“மாயாவயுநம் ஞானம்” என்கிறபடியே, இச்சை என்ற பொருளைக் குறிக்கிற ஞானத்தாலே. இச்சையாலே எங்கும்

____________________________________________________

1. “வைகுந்தன் பூதங்கள், அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்
  வகை இல்லை ஊழி பெயர்த்திடும் கொன்றே” என்பனவற்றைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பார்த்தேனுக்கு என் கண்களுக்கு - பார்க்கின்றேனான என்னுடைய
  கண்களுக்கு. ‘ஒன்றுபோல இராநின்றது,’ என்றது, “ஒன்றே ஒக்கின்றது”
  என்றதற்குப் பொருள். ‘என் போலே இராநின்றது’ என்பதனை, பின்னே
  வருகின்ற “ஊழி பெயர்த்திடும்” என்றதனோடு கூட்டுக. என்றது, ஸ்ரீ
  வைஷ்ணவர்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பெயர்ப்பார்கள்
  போன்று இராநின்றது என்றபடி. “வைகுந்தன்” என்றதனை நோக்கி
  ‘நித்திய விபூதியில் இருப்புக்கு’ என்கிறார்.

3. மாயை என்பதற்கு, இச்சை என்பது பொருள். அச்சொல் அப்பொருளில்
  வருவதற்கு மேற்கோள், ‘மாயா வயுநம் ஞானம்’