பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
56

New Page 1

    பொ-ரை :- உயிரைக் கொன்று உண்ணுகின்ற நோய் என்ன, பகை என்ன, பசி என்ன, மற்றும் தீயனவாயுள்ளன எவை எவை உன்ளனவோ அவை எல்லாவற்றையும் இவ்வுலகத்தில் விடாமல் நின்று போக்குவதற்காக, சக்கரத்தைத் தரித்த சர்வேச்வரனுடைய அடியார்கள் வந்தார்கள்; வந்து செய்த காரியம் யாது? எனின், இசைபாடியும் துள்ளி ஆடியும் இவ்வுலகத்திலே பெரிதும் பரந்தார்கள்; தொண்டீர்! மனத்தைச் செந்நெறியிலே நிறுத்திச் சென்று தொழுது உஜ்ஜீவிப்பீர்களாக என்கிறார்.

   
வி-கு :- இவ்வுலகில் நின்று கடிவான் என்று மாற்றுக. போந்தார் பரந்தார் - போந்தார்களாகிப் பரந்தார்கள். போந்தார்: முற்றெச்சம். நன்று பரந்தார் எனக் கூட்டுக. “நன்று பெரிது” என்பது தொல்காப்பியம். தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தித் தொழுது உய்ம்மின் என்க.

    ஈடு :-
ஆறாம் பாட்டு, 1எல்லாத் துக்கங்களையும் போக்குகைக்காக ஸ்ரீ வைணவர்கள் உலகமடையப் பரந்தார்கள்; அவர்களோடே நீங்களும் அவனை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

    கொன்று 2உயிர் உண்ணும் விசாதி-சரீரத்தின் பிரிவினைப் பிறப்பித்துப் பிராணன்களைக் கொள்ளை கொள்ளும்படியான வியாதி. அன்றிக்கே, பிராணனைப் பிரித்துச் சரீரத்தை முடிக்கும் வியாதி என்னுதல். இப்பொருளில், உயிர் என்பதற்குச் சரீரம் என்பது பொருள். பகை பசி - 3அப்படிச் செய்யும் பகையும் பசியும். இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது என்? தீயன எல்லாம் - 4தண்ணியவை எல்லாம். நின்று இவ்வுலகில் கடிவான் - இவ்வுலகில் விடாமல் நின்று போக்குகைக்காக. 5நேமிப் பிரான் தமர் போந்தார்-கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்கு

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “உயிர்” என்பதற்கு, இரண்டு பொருள்; ஒன்று, பிராணன். மற்றொன்று, சரீரம்.

3. “கொன்று உயிர் உண்ணும்” என்பதனைப் “பகை பசி” கட்கும்
  அடைமொழியாக்கிப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அப்படிச் செய்யும்’
  என்று தொடங்கி.

4. தண்ணியவை - தாழ்ந்தவை.

5. நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.
  எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.