பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
90

வதற

வதற்கு முன்பேயும் ஒரு பொருள் உண்டு இதற்கு அருளிச்செய்வது: 1“ஆத்மாக்கள் உஜ்ஜீவிப்பதற்கு முற்பாடனாய்க் கிருஷி செய்யுமவன்” என்கிறபடியே, நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாகச்செய்தே, பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பட்டவள் ஆகவோ என்பது.

    ‘ஆனாலும், காதலனைப் பிரிந்தாள், உடனே மடல் ஊர்ந்தாள்’ என்னாமே, ‘சிலநாள் ஆற்றாமையோடே பாடு ஆற்றிக் கிடந்தாள், பின்பு தன்னால் பொறுக்க ஒண்ணாமையான அளவு ஆனவாறே மடல் எடுத்தாள்’ என்னும் வார்த்தை படைக்கவேணுங்காண்’ என்ன, நாடியே பாசறவு எய்தி-பகவத் தத்துவம் உள்ள இடம் எங்கும் புக்குத் தேடிக் காணாமையால் நசை அற்றுத் துக்கத்தையுடையேனாய்ப் பின்பே அன்றோ மடல் எடுத்தது; பாசறவு-துக்கம். அன்றிக்கே, பாசு என்று பசுமையாய், அது அறுகையாவது, வைவர்ண்யமாய், வைவர்ண்யத்தை மேற்கொண்டு என்னுதல். அன்றிக்கே, பாசு என்று பாசமாய், அதாவது, பற்றாய், உறவினர்கள் பக்கல் பற்று அற்று என்னுதல்; அன்றிக்கே, சிநேகம் அடைய அவன் பக்கலிலே எய்தி என்னுதல். இன்றோ, நான் எத்தனை

_____________________________________________________

  என்றது, ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானம் செய்வதற்கு முன்பே
  என்றபடி. அன்றிக்கே, பாசுரத்திற்குத் தாத்பர்யம் அருளிச்செய்யும்போது
  என்ற படியுமாம்.

1. அந்தப் பொருள்தான் யாது? என்ன, அதனை அருளிச்செய்கிறார்
  “ஆத்மாக்கள்” என்று தொடங்கி.

  “ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந
   நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”

      இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால்
  சொல்லப்பட்ட சேஷத்துவமும், ‘நமஸ்தே’ என்றதனால், நமஸ்சப்தத்தால்
  சொல்லப்பட்ட பாரதந்திரியமும், ‘விஸ்வபாவந’ என்றதனால், நாராயண
  சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும், ‘நமஸ்தேஸ்து’ என்றதனால்,
  கைங்கர்யப் பிரார்த்தனையும், ‘ஹ்ருஷீகேச’ என்றதனால், ‘உனக்கே
  நாமாட்செய்வோம்’ என்கிறபடியே, கைங்கர்யத்தால் தனக்குப் பலன்
  இல்லாமையும் சொல்லுகிறது. இந்தச் சுலோகத்தில் ‘விஸ்வபாவந’
  என்றதனால், ஜகத்காரணத்வம் சொல்லி இருப்பதனால், ‘பூர்வஜ’ என்பதற்கு,
  சேதந உஜ்ஜீவனத்திற்கு முற்பாடனாய்க் கிருஷி பண்ணுமவன் என்ற
  பொருள் கொண்டு நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாய்’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார். இது, ஜிதந்தா. பாடு ஆற்றி-துன்பத்தைப்
  பொறுத்து.