|
அத
அத் தோள்’ என்னக்கடவதன்றோ.
1“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்”
என்கிறபடியே, பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,
ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?
2தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநுசந்திக்கும்படியோ அவன்படி. நன்று; நீ
எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்சவேண்டுங் காண் என்ன, ஏசு அறும் ஊரவர் - ‘இவளை ஒரு பழி
சொன்னோமாய் விட வல்லோமே’ என்று அதிலே துணிந்திருக்கிற ஊரார் என்னுதல்; என்றது,
ஏசுகையில் துணிந்திருக்கிற ஊரார் என்றபடி. இதனால், மடல் எடுக்கை நமக்குக் குற்றமாகில் அன்றோ
அவர்களுக்கும் பழி சொல்லுகையும் குற்றமாவது என்கிறாள் என்றபடி. அன்றிக்கே, ‘பகவத் விஷயத்தில்
கைவைத்தவர்களுக்கு ஒரு பழி சொன்னோமாய் விடவல்லோமே’ என்று துக்கப்பட்டிருக்கிற ஊரார் என்னுதல்;
ஏசறும் - துக்கப்பட்டிருக்கின்ற. அன்றிக்கே, ஏசற்று இருக்கிற நமக்கு. அதாவது, ஏசும் எல்லையைக்
கடந்திருக்கிற நமக்கு என்னுதல்; என்றது, அறிவுடையார்க்கு வரக்கூடியதான பழி, அது வாசனையோடே
குடிபோன நமக்கு வாராதுகாண்; இதற்கு அஞ்ச வேண்டா என்கிறாள் என்றபடி.
ஊரவர் கவ்வை -
பகவத் விஷயத்திலே கைவைத்தார் ‘இது பழி’ என்னில் அன்றோ பழியாவது, இதற்குப்
புறம்பாய் நின்ற ஊரார்கள் சொல்லுமது நமக்குப் பழியோ. தோழி - சமானமான துக்கத்தையும்
சுகத்தையுமுடைய உனக்கு ‘இது பழி’ என்று தோற்றில் அன்றோ எனக்கு மீள வேண்டுவது. என்செய்யுமே
- 3ஏசு அறும் எல்லை
____________________________________________________
1. உலக விஷய ஞானம் இல்லாமற்போதல்
பேற்று நிலையில் அன்றோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “ஜனங்களின் மத்தியில்”
என்று தொடங்கி.
“நோபஜனம் ஸ்மரன் இதம்
சரீரம்”
இது, சாந்தோக்யம். 8. 12 : 3.
2. அப்படி விலக்ஷண விஷயமோ?
என்ன, ‘தன்னை’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். படி: சிலேடை.
3. “ஏசறும் ஊரவர்” என்றதற்கு
அருளிச்செய்த மூன்றாவது பொருளைத்
திருவுளத்தே கொண்டு “என் செய்யும்” என்றதற்கு,
|