|
உபவ
உபவாசத்தினால் மெலிந்திருக்கிற
என் காரியத்தை நிறைவுற்றிருக்கிற உங்களுக்குச் செய்யவேண்டாவோ. செய்கொள் செந்நெல்-1ஒருமுதலே
செய்யை விழுங்கும்படியாயிருக்கை. இதனால், இத்தலையை நினைக்கலாம்படியோ அங்குத்தை இனிமை
இருக்கிறபடி என்பதனைத் தெரிவித்தபடி. “கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி
வருவார், மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே
பருகுவார்” என்பதன்றோ அவன்படி. 2அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன்
நம்மை நினைக்கப் புகாநின்றானோ. உயர் - 3அங்கு வரம்பு இல்லாமையாலே முடிய உயராநிற்குமத்தனை.
“அஹமந்நம்-நான் உணவாக இருக்கிறேன்” 4என்பாரளவும் செல்லத் தான் உயராநிற்குமத்தனை.
திருவண்வண்டூர் உறையும் - 5“செய்துபோன மாயங்களும்” என்று கூப்பிட வேண்டாதபடியாயிருக்கை.
என்றது, அவதாரத்தினின்றும் வேறுபடுத்தியபடி. கைகொள் சக்கரத்து-செந்நெலின்படியாயிருக்கை.
6கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை. என் கனிவாய்-முறுவலை எனக்கு முற்றூட்டு ஆக்கின
1. “செந்நெல்” என்ற
ஒருமைப் பிரயோகத்துக்குப் பயன் அருளிச்செய்கிறார்
‘ஒரு முதலே’ என்று தொடங்கி.
தேசத்தை வர்ணிப்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இத் தலையை’
என்று தொடங்கி. அங்குத்தை இனிமையிலே மனம் பொருந்தியவனாய்
இத்தலையை நினையாதிருக்கும் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘கண்ணன்’ என்று தொடங்கி.
“மதுராம்
ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகரஸ்திரீ கலாலாபமது
ச்ரோத்ரேண பாஸ்யதி”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.
18 : 15.
2. திருஷ்டாந்தத்திலே
சொன்னதனைத் தார்ஷ்ட்டாந்திகத்திலேயும்
காட்டுகிறார் ‘அந்தத் தேசத்தின்’ என்று தொடங்கி.
3. ‘அங்கு’ என்றது,
ஆகாசத்தினை.
4. என்பார் - நித்தியசூரிகள்.
5. “உறையும்” என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார் “செய்துபோன”
என்று தொடங்கி. இது, திருவாய். 5. 10 : 1.
6. செந்நெலைப்
போன்று கையை மறைத்துக்கொண்டு இருக்கிறதோ! என்ன,
‘கைக்கெல்லாம்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|