பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
141

தன

தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து, தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். 1அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும். அடியுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.

    உகவையால் நெஞ்சம் உள்உருகி - 2வாராய்! உன்செயல் பயன் இல்லாத செயல்காண்; பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய, எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது. உன் தாமரைத் தடம் கண்விழிகளின் அகவலைப் படுப்பான் - 3பகல்கண்டகுழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்; 4திருஷ்டிபந்தத்தாலேயன்றோ தனக்கே உரிமையாக்குவது. தாமரையைப்போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால் உண்டறுக்க ஒண்ணாத இன்பமிகுதியையுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக. அகவலை - வலைக்குள்ளே. அன்றிக்கே, 5அகவிய வலை என்றுமாம்; கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ. 6‘கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி

 

1. ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அவனுடைய விருப்பம்’ என்று தொடங்கி.
  ‘அடியுடையார்க்கு’ என்பதற்கு, செல்வத்தையுடையார்க்கு என்றும்,
  திருவடியையுடையார்க்கு என்றும் இருபொருள்.

2. இவனுடைய சங்கல்ப வாக்கியத்தைச் சொல்லுமவர்களுடைய உட்கருத்தை
  அவர்கள் வார்த்தையாலே அருளிச்செய்கிறார் ‘வாராய்’ என்று தொடங்கி.
  இவன் செய்யத் தொடங்கிய செயலையும், அச்செயல் பயன்
  அற்றபடியையும் அடைவே காட்டுகிறார்கள் ‘பிரிந்து’ என்று தொடங்கி.

3. “உன்தாமரைபுரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள்
  செய்ய” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, ‘பகல்கண்ட’ என்ற தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

4. கண்களாலே அகப்படுத்தும் என்பதனை விவரணம் செய்கிறார் ‘திருஷ்டி’
  என்று தொடங்கி. திருஷ்டி - கண்பார்வை. “தாமரைக் கண்களுக்கு
  அற்றுத் தீர்ந்தும்” என்பர் பின்னும்.

5. அகவிய வலை - நெடிய வலை. அவன் திருக்கண்கள் நெடிய வலையாக
  இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘கண்ணென்னும்’ என்று தொடங்கி.
  இது, நாய்ச்சியார் திரு. 14 : 4.

6. அப்படிக் கண்ணழகிலே ஈடுபடுவர்களோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்து, பிரமாணமும் காட்டுகிறார் ‘கண்ணிலே’ என்று
  தொடங்கியும், ‘தாமரைக் கண்ணனை’ என்று தொடங்கியும். இது, திருவாய்.
  2. 6 : 3.