|
ச
சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலை - 1உன்
படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ?
‘என்னுடைய படைப்புக் கொள்ளத்தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத்தக்கதாயினவாறு
என்?’ என்னுமே அவன்; உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் 2அன்னலும்
துன்னலுமாக விட்டுக் கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது? வண்டல் நுண்மணல் தெள்ளி
யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்டதன்றோ இது. நீ அடு சிறு சோறு 3நிர்மால்யத்தைப்போன்று
புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை; நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை
வழிவாரக் கூடி இருந்து உண்ணுமத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள்.
‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலையே’ என்றதனால் 4எங்களுடைய
லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்கமாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.
தகவு செய்திலை - 5நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக்கண்ணாலே
உன் முக ஒளியையும் முறுவலையும் கண்டுகொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும்
போன்றவர்களாவோமே? 6காதலனைப்
1. “எங்கள் சிற்றில்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உன்
படைப்பினைப் போன்று’ என்று தொடங்கி.
2. அன்னல் - வெயில். துன்னல் - சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டுநீர்
உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,
திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.
3. நிர்மால்யம் - சிவன் கோயில் நிர்மாலியம். ‘மூட நெய் பெய்து’ என்ற
விடத்தில் திருப்பாவை
திருப்பாசுரம் (27.) அநுசந்தேயம்.
4. “எங்கள் சிற்றில்” என்று தொடங்கி, “நின்றிலை, தகவு செய்திலை” என்று
கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘எங்களுடைய’ என்று தொடங்கி.
தக்கோர்மை - அருள், நியாயம்.
5. மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘நாங்கள்’ என்று தொடங்கி.
6. எய்யவில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்
மெய்விளை விடத்துமுத லையம்விட லுற்றாள்
ஐயனை யகத்துவடி வேயல புறத்தும்
கைவளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்.
என்றார் கம்பநாட்டாழ்வார்.
(கோலங்காண். 37.)
|