New Page 1
பொ-ரை :-
அன்று
வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை பிறந்த அளவிலே ஆய்ச்சியாகிய தாயால் சீறப்பட்டு
அழுத கூத்தனாகிய அப்பனை, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் துதித்த தமிழ்மாலை ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இசையோடும் நாவினால் விருப்பத்தோடு சொல்லுகின்றவர்கட்கு
வறுமை இல்லை.
வி-கு :-
அன்று
வெண்ணெய் வார்த்தையுள் ஆய்ச்சியாகிய அன்னையால் சீற்றம் உண்டு அழு அப்பன் என்க.
‘ஆய்ச்சியாகியஅன்னை’ என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். நவில உரைத்தல்-மனத்தொடுபடவுரைத்தல்.
ஈடு :-
முடிவில், 1இத் திருவாய்மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய
அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.
ஆய்ச்சியாகிய அன்னையால்-2அரசர்குலத்தில் ஒரு தாயும் ஆயர்குலத்தில் ஒருதாயும்
ஆகையாலே. பொதுவறுத்து ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார். 3தேவகிப் பிராட்டியார்
அடிக்கில் இத்தனை நோவாது காணும். 4“தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடி” என்கிறபடியே,
‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது. 5தெய்வம் அறியத்
தாய் ஆயினமை அன்றோ தேவகியார்பக்கல் உள்ளது; முலைச்சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும்
எல்லாம் இங்கே அன்றோ. அன்று வெண்ணெய்
1. “நவில உரைப்பார்க்கு
இல்லை நல்குரவு” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘அன்னையால்’ என்னாமல், “ஆய்ச்சியாகிய அன்னையால்” என்று
விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அரசர் குலத்தில்’ என்று
தொடங்கி.
3. “ஆய்ச்சியாகிய தாய்” என்றதற்குக் கருத்து எது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘தேவகிப் பிராட்டியார்’ என்று தொடங்கி.
4. யசோதைப் பிராட்டி அடித்தால் நோவுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தாய்
எடுத்த’ என்று தொடங்கி. இது, பெரிய
திருமொழி, 8. 3 : 5. உளைந்து - வருந்தி.
5. தாயாந் தன்மை இருவர்க்கும் பொதுவாக இருக்க, அவள் அடித்தால்
பொறுக்கப் போகாமைக்குக்
காரணம் ஏது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தெய்வம் அறிய’ என்று தொடங்கி.
|