பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
165

New Page 1

கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய், அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய். நிலனாய் விசும்பாய் - 1உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய். அன்றிக்கே, கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம். சிகரமாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலே இருக்கிற மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

    புகர் கொள் கீர்த்தி யல்லால் - 2பரமபதத்தில் புகழ் மழுங்கியாகாதே கிடப்பது. 3அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே! 4“என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும், 5“பூர்ண சாம்யத்தை அடைகிறான்” என்றும், 5“தம்மையே ஒக்க அருள் செய்வார்” என்றும் சொல்லுகிறபடியே, தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது. 6குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது. யாவர்க்கும் புண்ணியம் இல்லை - 7எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை. 8தாம்தாம் தேடிக்கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை. 9“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்

 

1. “நிலனாய் விசும்பாய்” என்பதற்கும் இரண்டு வகையாக மாறுபாட்டினை
  அருளிச்செய்கிறார் ‘உருவத்தோடு’ என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’
  என்று தொடங்கியும்.

2. “புகர்கொள் கீர்த்தி” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி. மழுங்கி இருத்தற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார் ‘அங்குள்ளாரில்’ என்று தொடங்கி.

3. “மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.

4. “நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.

5. இது, பெரிய திருமொழி, 11. 3 : 5.

6. இங்குப் புகர் உண்டாகைக்குக் காரணம் தாழ்ந்தவர்களுக்கு முகம்
  கொடுக்கையாலே என்கிறார் ‘குறைவாளர்க்கு’ என்று தொடங்கி.

7. ‘எல்லார்க்கும்’ என்றது, “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்
  இறாய்த்த தம்மோடு, இதில் இழியாத மற்றையாரோடு வாசி அற
  எல்லார்க்கும் என்றபடி.

8. “யாவர்க்கும் புண்ணியம் இல்லை” என்பது ஏன்? வேறு உபாயங்கள்
  இல்லையோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தாம் தாம்’
  என்று தொடங்கி.

9. அப்படிக் கழுத்துக் கட்டியோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘மின்னிடை மடவார்’ என்று தொடங்கி.