புண
புண்ணியம் பாவம் - இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம்.
புணர்ச்சி பிரிவு - புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு. எண்ணமாய் மறப்பாய்
- விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி. உண்மையாய் இன்மையாய்
- 1உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது,
சேதன அசேதனங்களுமாய் என்றபடி. அன்றிக்கே, உண்மை இன்மை என்னுதல். அல்லனாய் - புண்ணிய பாவங்கட்கு
நியாமகனாய், அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய். திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர்
சேர்ந்த பிரான் - 2“ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருமாளிகை ஒன்றனை மாத்திரம் கடல்
அழிக்கவில்லை” என்கிறபடியே, பிரளயகாலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட
திருவிண்ணகரிலே சேர்ந்துநிற்கிற உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணன். இன்னருளே - புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க்
கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம் அவனுடைய கிருபையாலே உண்டாயின. பாவமும்
அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே. சேதனனுடைய முற்பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக
நடத்துவிக்கின்ற காரணத்தாலே அதுவும் அவன் கிருபையாலேயாமத்தனை. நன்று; எல்லாம் செய்தாலும்3
தீமை அவன் கிருபையாலே வரக்கூடுமோ? என்னில், தீயதனைக் காட்டி வெதுப்பி நல்வழி போக்கு கையினாலே
கூடும் அன்றோ. இன் அருள் - காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள். கைதவமே - நான்
சொல்லுகிற இதில்
1. இங்கே, “இல்லதும் உள்ளதும்”
(1. 2 : 4.) என்ற திருப்பாசுரத்திற்கு
அருளிச்செய்துள்ள பொருளை நினைவு கூர்க.
2. “வாசுதேவக்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”
என்பது,
ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.
3. ‘தீமை அவன் கிருபையாலே வரக் கூடுமோ?’ என்றது, தீமை அவன்
நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே
வரக் கூடுமோ? என்றபடி. அதுவும்
ஹிதரூபமாகையாலே ‘கூடும்’ என்று பரிஹரிக்கிறார் ‘தீயதனைக் காட்டி’
என்று தொடங்கி. இங்கே,
அறத்திற்கே அன்புசார் பென்ப; அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
என்ற திருக்குறள்
ஒப்புநோக்கத் தகும்.
|