ஈ
ஈடு :-
ஆறாம்பாட்டு.
1‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன்குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க
ஒண்ணாதபடி கலந்து அதனாலே பேரொளிப் பிழம்பாயிருக்கிறவன் திருவிண்ணகரிலே நின்றருளின சர்வேசுவரன்
கண்டீர் என்கிறார்.
மூன்று உலகங்களுமாய் - மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய். அன்றிக்கே, 2கிருதகம்
அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல். அல்லனாய் -
3அல்லாதமேலேயுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய். அன்றிக்கே, இந்த உலகங்களைச்
சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே, இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன்
என்னுதல். உகப்பாய் முனிவாய் - மகிழ்ச்சியும் முனிவுமாய். பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்
- திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய். தவ்வை - திருமகள் அல்லாதவள். புகழாய்ப் பழியாய் - திருமகளினுடைய
கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ், தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி. தேவர் மேவித் தொழும்
திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - 4இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால்
கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத்
திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது; அப்படி
1. “பாவியேன்” என்றதனை
நோக்கி ‘நான் அல்லேன்’ என்று தொடங்கியும்,
“மனத்தே உறைகின்ற” என்றதனை நோக்கித்
‘தன் குணங்களையும்’ என்று
தொடங்கியும், “பரஞ்சுடர் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்” என்றதனை
நோக்கி ‘அதனாலே’ என்று தொடங்கியும் அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. கிருதகமாவது, அவாந்தரபிரளயத்திலே அழியப் படைப்புக் காலத்திலே
மீண்டும் படைக்கப்படுமவை.
இவை கீழ் ஏழுலகமும் மேல் மூன்று
உலகமும். அகிருதகமாவது, அவாந்தர சிருஷ்டியில் படைக்கப் படாதவை.
இவை, ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.
கிருதாகிருதகமாவது, அவாந்தரபிரளயத்தில்
குடி வாங்குகையாலே கிருதகம்
என்றும், கிருஹங்களுக்குச் சொரூபநாசம் இல்லாமையாலே அகிருதகம்
என்றும்
சொல்லப்படும் மஹர்லோகம்.
3. “மூவுலகங்களுமாய்” என்றதற்கு அருளிச்செய்த இருவகைப்
பொருள்களுக்கும் தகுதியாக “அல்லனாய்”
என்பதற்கும் முறையே
இருவகையாகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அல்லாத’ என்று
தொடங்கியும்,
‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.
4. “மேவித் தொழும்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘இந்திரன்
முதலான’ என்று தொடங்கி.
‘பூமியிலே ஆகையாலே’ என்றது, பூமியிலே
இருக்கையாலே என்றபடி.
|