த
திவ்வியதேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பையுடைத்தான திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும்
வலிய உபாயம் வேறு ஒன்றுஇல்லை.
வி-கு :- உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த
பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.
ஈடு :-
ஏழாம்பாட்டு.
1எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.
பரஞ்சுடர்உடம்பாய்-2“திருமேனி ஒளிகளின்கூட்டம்” என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான
அசாதாரண திவ்வியவிக்கிரகத்தையுடையனாய். அழுக்குப் பதித்த உடம்பாய் - முக்குணங்களுக்கு வசப்பட்ட
உலகத்தையே உருவமாகவுடையனாய். கரந்தும் - இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச்செய்தே
3“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான்இல்லை” என்கிறபடியே, இவற்றுக்குத் தோன்றாத
படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும். தோன்றியும் - 4காண வாராய் என்று
என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும்.
நின்றும் - நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். 5அவ்விடங்களிலே,
கைதவங்கள் செய்தும் - வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும். அதாவது, அவதரித்து நிற்கச்செய்தே
தன்படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும், தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி
செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி. விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த
பிரான்-6‘பிரமன்முதலாயினோர்’ தலைபடைத்த பிரயோஜனம் பெற்
1. “வரம்கொள் பாதமல்லால்
இல்லை” என்பது போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”
இது, ஸ்ரீ
விஷ்ணுபுரா. 1. 9 : 67.
3. “யம் ஆத்மா ந வேத”
என்பது,
பிருஹதாரண்யக உப.
4. தோன்றாமல் நிற்கிறவன் தோன்றுவது எதற்காக? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘காணவாராய்’
என்று தொடங்கி. இது திருவாய். 8. 5 : 2.
5. அவ்விடங்களிலே-இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களிலே.
6. “சிரங்களால்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘பிரமன்’ என்று
தொடங்கி.
|