ஈ
ஈடு :-
எட்டாம்பாட்டு.
1எனக்குப் புகலான மாத்திரமன்றிக்கே, மற்றும் எல்லாமும் திருவிண்ணகர் சேர்ந்தபிரானே
என்கிறார்.
சுரர்க்கு வன்சரண் ஆய் - தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய்.
அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் - அசுரத்தன்மை வாய்ந்தவர்களுக்கு 2‘அந்தகன் தண்ணீர்’
என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் - தன்னுடைய பாதங்களின்
நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும். சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே,
பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும். தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர்சேர்ந்தபிரான்
- 3“புண்ணிய சரித்திரங்களையுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச்
செய்யப்பட்டதோ” என்கிறபடியே, தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின
உபகாரகன். என் சரண் - எனக்குப் புகலிடம். என் கண்ணன் - எனக்குப் பவ்யனானவன். என்னை
ஆளுடை என் அப்பன் - என்னை அடிமைகொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன். 4‘உலகம்’
என்பது, உயர்ந்தோர் மாட்டு.
(8)
1. “என் சரண் என் கண்ணன்”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார். மேற்பாசுரத்தில் எல்லார்க்கும்
புகல்
என்றார். இதில், எனக்குப் புகலான மாத்திரமன்றிக்கே எல்லாவிதமான
உறவும் ஆனான் என்கிறார்
என்பதாம்.
2. ‘அந்தகன் தண்ணீர் என்னும்படி’ என்றது, கூற்றுவனும் குளிர்ந்தவன்
நல்லவன் என்னும்படி என்றபடி.
3. “தஷிணாதிக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”
என்பது,
ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பலதீர்த்தம்
அத்திக்கினும் எத்திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.
என்பது,
வில்லிபாரதம்.
4. “உலகம்” என்பதற்கு, மேல் ‘அநுகூலரான அருச்சுனன்
முதலாயினோர்களை’ என்று பொருள் அருளிச்செய்தார்;
அதனை
விவரணம் செய்கிறார் ‘உலகம்’ என்று தொடங்கி. என்றது, உலகம் என்ற
சொல் உயர்ந்தோரைக்
குறிக்கும் என்றபடி.
உலக மென்பது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டாக லான,
என்பது
மரபு.
|