New Page 1
பொ-ரை :-
நிழலும்
வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி,
மற்றுமாகி, அவை அல்லனுமாகி, இசைபாடுகின்ற இளமைபொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திருவிண்ணகரில்
எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே
காணுங்கோள்.
வி-கு :- அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் - பற்றுக்கோடு.
ஈடு :- பத்தாம்பாட்டு. 1அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை
என்னுமிடத்தைப் புத்திபண்ணுங்கோள் என்கிறார்.
நிழல் வெய்யில் - குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும்.
சிறுமை பெருமை - சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும் குறுமை நெடுமை
மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள். சுழல்வன நிற்பன - ஜங்கமங்களும், தாவரங்களும். மற்றுமாய்
- சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது. அவை அல்லனுமாய்
- 2அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி
நிற்பான் என்று மேலே சொல்லப்பட்டதே அன்றோ; இனி, இங்கு என்? என்னில், அவற்றிற்கு வரும்
அவஸ்தைகளையுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி. அவை: சேதனனிடத்தே உள்ள
சுகதுக்கங்களும், அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம். மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர்
மன்னுபிரான் - பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களையுடைத்தான வண்டுகள் வாழாநின்றுள்ள திருவிண்ணகரிலே
நித்தியவாசம் செய்கிற உபகாரகன். கழல்கள் அன்றி மற்று ஓர் களைகண் இலம் - அவன் திருவடிகளை
ஒழிய
1. “கழல்கள் அன்றி மற்று
ஓர் களைகண் இலம்” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மேல், ஆறாம் பாசுரத்திலும் “அல்லனாய்” என்றார்; இங்கும்,
“அல்லனுமாய்” என்கிறார்;
இவற்றிற்கு வேறுபாடு என்னை? எனின், அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘அவற்றுக்கு’ என்று தொடங்கி.
என்றது, அங்கு,
கர்மங்கட்குக் கட்டுப் படாதவன் என்பது சொல்லப் பட்டது. இங்கு,
அவற்றின்
காரியமான சுகதுக்கங்கள் இல்லாதவன் என்பது
சொல்லப்பட்டது என்றபடி.
|