பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
18

வரம

வரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று; தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச - 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச - 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது - அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா - என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள். திருவண்வண்டூர் நாதன் - ‘ஸ்ரீவைகுண்டநாதன்’ என்னுமதிற் காட்டில் உண்டான ஏற்றம் சொல்லுகிறது. 4எளியாரை வலியார் பறிக்க, அங்கே கோயிற் சாந்து பூசியிருக்குமது ஓர் ஏற்றம் அன்று. வேத ஒலியும் யாகங்களில்

 

1. தன் நாயகன் வைதிகக் கிரியைகளில் ஈடுபட்டிருப்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘தாந யஜ்ஞ’ என்று தொடங்கி.

 
“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
   ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். இச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்
  செய்கிறார் ‘தானங்கள் செய்யுமிடத்தே’ என்று தொடங்கி. சடங்குகள் -
  கிரியைகள்.

2. “மஹத்ஸூஸமாஜேஷூ” என்பதற்கு, தீர்க்க சத்திரம் என்றும், மஹாசங்கம்
   என்றும் இரண்டு யோஜனைகள் சொல்லலாயிருக்கையாலே அவற்றை
   அருளிச்செய்கிறார் ‘தீர்க்க சத்திரங்களிலே’ என்று தொடங்கி.
   தீர்க்கசத்திரம் - ஒரு யாக விசேடம்.

3. “சகாரம்” இங்குச் சொல்லப்படாதனவற்றை எல்லாம் தழுவுகின்றது என்று
   கொண்டு, அதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘யாவன் ஒருவன்’ என்று
   தொடங்கி.

4. ஏற்றம் யாது? என்ன, அதனை அருளிச்செய்கிறார் ‘எளியாரை’ என்று
  தொடங்கி. அங்கே - பரமபதத்தே. கோயிற்சாந்து - சிலாக்கியமான சாந்து.