|
மற
மற்றும் பல-மற்றைப்
பிராட்டிமாரோடு கலந்தபடி. 1சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை,
அஸ்திர சாஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறுபோலே, இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ. மாயம்
கோலம் பிரான்-2நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான
மிக்க ஆச்சரியமான ஒப்பனையுடைய உபகாரகன். 3அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியோடு
கலந்தாற் போலே, அல்லாத பிராட்டிமார் “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்” என்று இருக்குமவர்களுடைய திருமுலைத்தடத்தில் குங்குமக் குழம்பும்
கோயிற்சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம். தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு
கழிந்த போது - அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன்வசம் இன்றி அழியும்படி. 4“நினைதொறும்,
நெஞ்சு இடிந்துகும்” என்றே அன்றோ இருப்பது. நேயத்தோடு கழிந்தபோது - 5நினைக்கப்படுகின்ற
பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்தபோது. நேயம் - நேசம். எனக்கு எவ்வுலகம்
நிகர் - ஒரு தேச விசேடத்தில்தான் எனக்கு ஒப்பாவார் உளரோ? 6அநுபவ வேளை
போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக்
1. இவனுக்கு வேறு செயல் இல்லையோ?
இதுவேயோ செயல்? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்று தொடங்கி.
2. “பின்னை தோள்கள்
மணந்ததும்” என்றதனையும் கூட்டி “மாயம் கோலம்”
என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘நப்பின்னைப் பிராட்டி’ என்று
தொடங்கி.
3. “மாயம் கோலம்” என்றதனை
“மற்றும் பல” என்றதனோடு கூட்டி, வேறும்
ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
‘கொங்கைமேல்’ என்று தொடங்கும் பாசுரம், நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.
4. இது, திருவாய். 9. 6 :
2.
5. அநுபவத்தால் உண்டாகக்கூடிய
பிரீதி நினைவினால் உண்டாகக் கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நினைக்கப்படுகின்ற’
என்று
தொடங்கி.
6. நித்தியாநுபவம்
செய்கிற நித்தியசூரிகளைக் காட்டிலும் இவர்க்கு ஏற்றம்
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அநுபவவேளை’ என்று
தொடங்கி.
|